கோதுமை ரவா அடை
Page 1 of 1
கோதுமை ரவா அடை
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- கோதுமை ரவா – 1 கப்
- துவரம்பருப்பு- 1/2 கப்
- கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
- பயத்தம் பருப்பு- 2 டேபிள்ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 4
- பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
- உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
- வெங்காயம் – 1
- கறிவேப்பிலை – சிறிது
- நல்லெண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
- பருப்புகள் அனைத்தையும் தண்ணீரில் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
- கோதுமை ரவாவை, அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும்.
- பருப்புகள் ஊறியபின்னர், நன்றாகக் கழுவி, தண்ணீரை வடித்து விட்டு,
அத்துடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொரகொரப்பாக
அரைத்துக் கொள்ளவும். - அரைத்த மாவுடன், ஊற வைத்துள்ள கோதுமை ரவாவைச் சேர்த்து கலக்கவும்.
- கறிவேப்பிலை, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மாவில் சேர்க்கவும்.
தேவைப்பட்டால், சிறிது தண்ணீரைச் சேர்த்து, தோசை மாவை விட சற்று
கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். உப்பு சரி பார்த்து, தேவையானால் இன்னும்
சிறிது உப்பைச் சேர்க்கலாம். - தோசைக்கல்லை காயவைத்து, சூடானதும், எண்ணைத் தடவி ஒரு பெரிய
குழிக்கரண்டி மாவை நடுவில் ஊற்றி பரப்பி விடவும். அடையைச் சுற்றி ஒரு
டீஸ்பூன் எண்ணை விட்டு, ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு, மறு
புறமும் சிவக்க வெந்ததும் கல்லிலிருந்து எடுத்து வைக்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum