புட்டு பயறு
Page 1 of 1
புட்டு பயறு
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- புட்டு மாவு – 2 கப்
- தேங்காய்த்துருவல் – 2 கப்
- உப்பு- 1 டீஸ்பூன்
- பச்சை பயறு – 1 கப்
செய்முறை:
- புட்டு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பையும் போட்டு
அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக் கலக்கவும். மாவைக் கையில்
எடுத்து பிடித்தால் பிடிக்கும் படியும், கையிலிருந்து பாத்திரத்தில்
போட்டால் உதிரும் படியும் இருக்க வேண்டும். - புட்டுக்குழலில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவலைப் போட்டு அதன்
மேல் 2 டேபிள்ஸ்பூன் புட்டு மாவை போடவும். இதே போல் தேங்காய்த்துருவலையும்,
மாவையும் மாற்றி மாற்றிப் போட்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேக
வைத்தெடுக்கவும். - புட்டுக்குழல் இல்லையென்றால், தேங்காய்த்துருவலையும் மாவையும்
ஒன்றாகக் கலந்து, இட்லி தட்டில் போட்டு ஆவியில் வேக விட்டு எடுக்கவும். - பச்சைப் பயிறை முதல் நாள் இரவே ஊறப் போட்டு, மறு நாள் காலையில், ஊறிய
பயிறை நன்றாகக் கழுவி, ஒரு குக்கரில் போட்டு அத்துடன் உப்பு, 2 கப் தண்ணீர்
சேர்த்து 2 அல்லது 3விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.புட்டும்,
பயறும் ஆரோக்கியமான ஒரு காலை உணவு
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum