புட்டு
Page 1 of 1
புட்டு
பச்சரிசி & 2 ஆழாக்கு வெல்லம் & 250 கிராம் ஏலக்காய் & 6 தேங்காய் & 2 அல்லது 3 கீற்று முந்திரி & 8 மஞ்சள்தூள் & 1/2 தேக்கரண்டி நெய் & 5 தேக்கரண்டி
பச்சரிசியைக் களைந்து, உலர்த்தி, மாவு ஆக்கிக் கொள்ளவும். வாணலியில் மாவைப் போட்டு சற்று சூடு வரும் வரை வறுக்கவும். (மிக லேசான சிவப்பு நிறம் வரும் வரை) தாம்பாளத்தில் கொட்டி, கொஞ்சம் சூடு ஆற விடுங்கள். ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு மஞ்சள்தூள் போட்டு அடுப்பில் வைத்து சுட வைக்கவும். லேசாக தண்ணீர் சூடு பிடித்ததும் இறக்கி வைக்கவும். வறுத்த மாவின் மீது கொஞ்சம் தண்ணீர் தெளித்து பிசையவும். நிறைய தண்ணீரை ஊற்றாமல் துளிதுளியாகத் தெளிக்கவும். மாவு ஈரப்பசையுடன் இருக்க வேண்டும். மொத்தையாக ஆக கூடாது. மாவை கையால் பிடித்தால் பிடிக்க முடிய வேண்டும். உதிர்த்தால் மாவாக உதிர வேண்டும். அந்த பக்குவம் வந்ததும் தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி விடவும். ரவை சல்லடையில் இந்த மாவை சலித்து, கட்டியில்லாமல் செய்து கொள்ளவும். பிறகு மெல்லிய துணியில் மாவைப் போட்டு மூட்டை போலக் கட்டி இட்லிதட்டில் வைத்து வேக விடவும். அதிக பட்சமாக பத்து நிமிடங்களில் வெந்து விடும். மூட்டையிலுள்ள மாவில் சிறிதளவு இரண்டு விரல்களால் எடுத்துத் திரித்தால் திரி போல வந்தால் மாவு வெந்து விட்டதாக அறிந்து கொள்ளுங்கள். மூட்டையை வெளியே எடுத்து வெந்த மாவை தாம்பாளத்தில் கொட்டி ஆற விடுங்கள். நன்றாக ஆறிய பிறகு, ரவைச் சல்லடையில் மாவைக் கொட்டி தேய்த்து சலித்துக் கொள்ளவும். வாணலியில் ஒரு தம்ளர் தண்ணீர் விட்டு வெல்லத்தைத் தட்டிப் போட்டு கொதிக்க விடவும். பாகு காய்ந்து நல்ல கெட்டிப் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும். சலித்து வைத்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி, கீரைகடையும் மத்தால் மசிக்கவும். இரண்டு மூன்று தேக்கரண்டி நெய் விட்டு மசித்து, அதில் வெல்லப் பாகை கொஞ்சம் ஊற்றி நன்றாக மசித்து சேர்க்கவும். மாவு முழுவதிலும் பாகு நன்றாகப் படும்படி கிளறி மசிக்கவும். பிறகு நன்றாக ஆற விடவும். தேங்காயை சிறு சிறு துண்களாக்கி நெய்யில் பொரித்து புட்டில் போடவும். ஏலக்காயை பொடியாக்கித் தூவ வேண்டும். முந்திரியை சிறு சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்துப் போட்டு எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து வைக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜவ்வரிசி புட்டு
» புட்டு+கடலை கறி
» அருகம்புல் புட்டு
» சமையல்:உருளைக்கிழங்குப் புட்டு
» வெண்ணெய் புட்டு
» புட்டு+கடலை கறி
» அருகம்புல் புட்டு
» சமையல்:உருளைக்கிழங்குப் புட்டு
» வெண்ணெய் புட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum