புட்டு பயறு
Page 1 of 1
புட்டு பயறு
தேவையானப்பொருட்கள்:
புட்டு மாவு – 2 கப்
தேங்காய்த்துருவல் – 2 கப்
உப்பு- 1 டீஸ்பூன்
பச்சை பயறு – 1 கப்
செய்முறை:
புட்டு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் உப்பையும் போட்டு அதில் சிறிது வெதுவெதுப்பான நீரைத் தெளித்துக் கலக்கவும். மாவைக் கையில் எடுத்து பிடித்தால் பிடிக்கும் படியும், கையிலிருந்து பாத்திரத்தில் போட்டால் உதிரும் படியும் இருக்க வேண்டும்.
புட்டுக்குழலில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவலைப் போட்டு அதன் மேல் 2 டேபிள்ஸ்பூன் புட்டு மாவை போடவும். இதே போல் தேங்காய்த்துருவலையும், மாவையும் மாற்றி மாற்றிப் போட்டு ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்தெடுக்கவும்.
புட்டுக்குழல் இல்லையென்றால், தேங்காய்த்துருவலையும் மாவையும் ஒன்றாகக் கலந்து, இட்லி தட்டில் போட்டு ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
பச்சைப் பயிறை முதல் நாள் இரவே ஊறப் போட்டு, மறு நாள் காலையில், ஊறிய பயிறை நன்றாகக் கழுவி, ஒரு குக்கரில் போட்டு அத்துடன் உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.புட்டும், பயறும் ஆரோக்கியமான ஒரு காலை உணவு.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum