பொட்டுக்கடலை உருண்டை
Page 1 of 1
பொட்டுக்கடலை உருண்டை
முந்திரிப்பருப்பு
சர்க்கரை
பொட்டுக்கடலை
தேவையானப்பொருட்கள்:
- பொட்டுக்கடலை – 3 கப்
- சர்க்கரை - 2 கப்
- நெய் - 1/2 கப்
- ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன்
- முந்திரிப்பருப்பு – 10 அல்லது 15
செய்முறை:
- பொட்டுக்கடலையையும், சர்க்கரையையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்து, சலித்து எடுக்கவும்.
- பொட்டுக்கடலை மாவை அளந்து ஒரு பாத்திரத்தில் போடவும். பொடித்த
சர்க்கரையும் அதே அளவு இருக்க வேண்டும். சர்க்கரைப்பொடி கூடவோ, குறையவோ
இருந்தால் அதற்கேற்றாவாறு சரி செய்து கொள்ளவும். மாவையும்,
சர்க்கரைப்பொடியையும் ஒன்றாகக் கலக்கவும். அத்துடன் ஏலக்காய் தூளையும்
சேர்த்து கலந்துக் கொள்ளவும். - ஒரு வாணலியில் சிறிது நெய்யை விட்டு சூடானதும், அதில்
முந்திரிப்பருப்பைப் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, மாவில் போட்டு மீண்டும்
நன்றாகக் கலக்கவும். - வாணலியில் எல்லா நெய்யையும் விட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, சூடாக்கவும்.
- ஒரு தட்டில், நாலைந்துக் கரண்டி பொட்டுக்கடலைமாவு கலவையைப் போட்டு,
அதில் சிறிது சூடான நெய்யை விட்டுக் கிளறி, அதே சூட்டுடன் உருண்டைகளாகப்
பிடிக்கவும். இதே போல் எல்லா மாவையும் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, சூடான
நெய் சேர்த்து உருண்டைகளைப் பிடித்தெடுக்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பொட்டுக்கடலை உருண்டை
» பொட்டுக்கடலை உருண்டை
» பொட்டுக்கடலை உருண்டை
» பொட்டுக்கடலை பொரி உருண்டை
» கறிவேப்பிலை பொட்டுக்கடலை சட்னி
» பொட்டுக்கடலை உருண்டை
» பொட்டுக்கடலை உருண்டை
» பொட்டுக்கடலை பொரி உருண்டை
» கறிவேப்பிலை பொட்டுக்கடலை சட்னி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum