தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாம்பழ அல்வா

Go down

மாம்பழ அல்வா                           Empty மாம்பழ அல்வா

Post  ishwarya Sat Apr 13, 2013 2:20 pm

மாம்பழ அல்வா                           Mango-150x150

மாம்பழம்

மாம்பழ அல்வா                           Munthiri-150x150

முந்திரிப்பருப்பு

மாம்பழ அல்வா                           Ghee-150x150

நெய்






தேவையானப்பொருட்கள்:


  1. நன்கு கனிந்த மாம்பழம் – 1
  2. ரவா – 3/4 கப்
  3. சர்க்கரை – 3/4 கப்
  4. நெய் – 1/2 கப்
  5. முந்திரிப்பருப்பு – சிறிது
  6. ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன்

செய்முறை:


  1. மாம்பழத்தோலைச் சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி எடுத்து
    மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். அரைத்த விழுது ஒன்று அல்லது
    ஒன்றரை கப் அளவிற்கு இருக்க வேண்டும். மேற்கூறிய பொருட்கள், ஒன்றரைக் கப்
    மாம்பழ விழுதிற்கு ஏற்றது. விழுது குறைவாகவோ, அல்லது கூடுதலாகவோ இருந்தால்,
    இதரப் பொருட்களை அதற்கு தகுந்தாற்போல் சேர்க்கவும்.
  2. ஒரு வாணலியில் ரவாவைப் போட்டு இலேசாக வறுத்து (நிறம் மாறக்கூடாது.
    தொட்டால் சற்று சுட வேண்டும்) ஆற விட்டு மிக்ஸியில் போட்டு பொடி செய்து
    கொள்ளவும். சர்க்கரையயும் நன்றாக பொடித்துக் கொள்ளவும்.
  3. அடி கனமான வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அதில்
    முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும். அதே
    வாணலியில், அரைத்த மாம்பழ விழுதைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து,
    ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அதில் பொடித்த ரவாவையும்,
    சர்க்கரையையும் போட்டு, நன்றாகக் கிளறவும். நெய்யை சிறிது சிறிதாக விட்டு,
    கெட்டியாகும் வரை கைவிடாமல் கிளறவும். அல்வா வாணலியில் ஒட்டாமல் சுருண்டு
    வரும் பொழுது, அதில் வறுத்த முந்திரிப்பருப்பையும், ஏலக்காய் தூளையும்
    சேர்த்துக் கிளறி, ஒரு நெய் தடவியத் தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி
    விடவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum