தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அவியல்

Go down

அவியல்                                          Empty அவியல்

Post  ishwarya Sat Apr 13, 2013 2:10 pm

உருளைக் கிழங்கு

அவியல்                                          Beans2-150x150

பீன்ஸ்

அவியல்                                          Coco14-150x150

தேங்காய்






தேவையானப்பொருட்கள்:


  1. பரங்கிக்காய் – 1 துண்டு
  2. பூசணி – 1 துண்டு
  3. பெரிய தேங்காய் – 1
  4. கடுகு – 1 ஸ்பூன்
  5. சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
  6. பச்சைமிளகாய் – 3
  7. தேங்காய் எண்ணெய் – 1 கரண்டி
  8. உப்பு
  9. மஞ்சள் பொடி
  10. தயிர் – 1 கப்
  11. அரிசிமாவு – 1 ஸ்பூன்
  12. கொத்தமல்லி, கருவேப்பிலை
  13. காய்கறிகள்: அவரை, பீன்ஸ், கொத்தவரை, சர்க்கரைவள்ளிகிழங்கு, சேப்பங்கிழங்கு, உருளைகிழங்கு, பட்டாணி, பெங்களூர் கத்தரி – தேவைக்கேற்ப

செய்முறை:


  1. சேப்பங்கிழங்கு, உருளைகிழங்கு – இவற்றை வேகவைத்து தோல் உரித்துக்கொண்டு துண்டுகளாக்கவும்.
  2. மற்ற காய்கறிகளையும் துண்டங்களாக்கி சிறிது மஞ்சள் பொடி, 1/2 ஸ்பூன் உப்பு போட்டு வேகவைக்கவும்.
  3. தண்ணீர் அதிகமாக இருந்தால் வடித்துக்கொள்ளவும்.
  4. தேங்காய், சீரகம், பச்சைமிளகாய், சிறிது உப்பு – இவற்றை மிக்ஸியில்
    நன்றாக அரைத்து அரிசிமாவும் சேர்த்து தயிரில் கரைத்து
    வெந்துகொண்டிருக்கும் காய்களில் விடவும்.
  5. உரித்த கிழங்குகளையும் அதில் போடவும்.
  6. தேங்காய் எண்ணையை காயவைத்து அதில் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அவியலில் கொட்டி இறக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum