காய்கறி அவியல் காய்கறி அவியல்
Page 1 of 1
காய்கறி அவியல் காய்கறி அவியல்
தேவையான பொருட்கள்:
வெண்டைகாய் - 200 கி
பூசணைகாய் - 200 கி
சுரைக்காய் - 200 கி
புடலங்காய் - 200 கி
வெள்ளரிக்காய் - ஒன்று
பச்சை மிளகாய் - 5
வெங்காயம் - 200 கி
தேங்காய் - 1/2 மூடி
கரம் மசாலா பொடி - 1 மேஜைக் கரண்டி
கொத்துமல்லி - ஒரு கொத்து
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி, பூண்டு - 1 மேஜைக் கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் காய்களை கழுவி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
* மிளகாய், இஞ்சி,தேங்காய், பூண்டு அனைத்தையும் விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, அதனுடன் வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்..
* அதனுடன் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும். காய்கறிகள் வேக சிறிது தண்ணிர் சேர்க்கவும்.
* காய்கறிகள் பாதி வெந்தவுடன் கொத்தமல்லியுடன் கரம் மசாலாவையும் தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். ஆறிய பின் பரிமாறவும். இது சத்தான வைட்டமின் உணவாகும்..
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum