கத்தரிக்காய் துவையல்
Page 1 of 1
கத்தரிக்காய் துவையல்
தேவையானப்பொருள்கள்:
செய்முறை:
- கத்தரிக்காய் – 2
- மிளகு – சிறிதளவு
- சீரகம் – சிறிதளவு
- தேங்காய் – சிறு துண்டு
- உளுத்தம் பருப்பு – சிறிதளவு
- கடலை பருப்பு – சிறிதளவு
- காய்ந்த மிளகாய் – 6
- கறிவேப்பிலை – சிறிதளவு
- புளி – சிறு எலுமிச்சை அளவு
- உப்பு – சிறிதளவு
செய்முறை:
- விதை இல்லாத கத்தரிக்காய் எடுத்து சுட்டு கொள்ள வேண்டும். மேலே கருகிய தோலை எடுத்து விட வேண்டும்.
- அனைத்து பொருள்களையும் கொஞ்சம் எண்ணெய் விட்டு வறுத்து கொள்ள வேண்டும்.
- தோலை நீக்கிய கத்தரிக்காய் மற்றும் வறுத்த அனைத்து பொருள்களையும் சேர்த்து மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
- தேவையானால் எண்ணெய் கடுகு சேர்த்து தாளித்து கொள்ளலாம்.
- வித்தியாசமான சுவையான துவையல் ரெடி. இவை இட்லி, தோசையுடனும் சாப்பிடலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum