சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
Page 1 of 1
சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- சுரைக்காய் – அரைகிலோ
- பாசிப்பருப்பு – 100 கிராம்
- வெங்காயம் -1
- பச்சை மிள்காய் – 3
- தேங்காய் துருவல் – 4 டேபிஸ்பூன்
- மஞ்சள் தூள்- அரைஸ்பூன்
- சீரகத்தூள் – அரைஸ்பூன்
- மிளகாய் வற்றல் – 2
- கடுகு – தலா 1 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – தலா 1 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவைக்கு
- மல்லி இலை – சிறிது
- கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
- முதலில் பாசிப்பருப்பை சிவறாமல் இளந்தீயில் வெதுப்பி கொள்ள வேண்டும்.
- சுரைக்காயை தோல் சீவி சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.வெங்காயம் மல்லி இலை நறுக்கி கொள்ளவும்.
- பாசிப்பருப்பை சிறிது தண்ணீர்விட்டு வேகவைக்கவும், பாதி வெந்ததும்
சுரைக்காய் போடவும், கொதி வந்ததும், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும்.
உப்புதூள் தேவைக்கு சேர்க்கவும். பிரட்டி விடவும் சுரைக்காயில் தண்ணீர்
ஊறும் மூடி போட்டு வேக வைக்கவும். - மிக்ஸியில் மிளகாயை இரண்டு சுற்று சுற்றி அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து பரபரவென்று அரைத்து எடுக்கவும்.
- வெந்து வரும் சுரைக்காயுடன் அரைத்த தேங்காய் பச்சை மிளகாயை
சேர்க்கவும். நன்கு பிரட்டி விடவும். கொதி வரவும் அடுப்பை சிம்மில்
வைக்கவும். - நறுக்கிய மல்லி இலை தூவவும். உப்பு சரிபார்க்கவும்.
- கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு
வெடித்ததும் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போடவும் நறுக்கிய வெங்காயம்
போட்டு தாளித்து சிவறவும் தாளிச்சதை வெந்த சுரைக்காய் பாசிப்பருப்பு
கூட்டில் சேர்க்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் கூட்டு
» சுரைக்காய் கூட்டு
» சுரைக்காய் சுரைக்காய்
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் கூட்டு
» சுரைக்காய் கூட்டு
» சுரைக்காய் சுரைக்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum