சுரைக்காய் கூட்டு
Page 1 of 1
சுரைக்காய் கூட்டு
தேவையான பொருள்கள்:
சுரைக்காய் = அரை கிலோ
துவரம் பருப்பு = 100 கிராம்
பெருங்காயம் = சிறிது
மஞ்சள் பொடி = சிறிதளவு
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் = 4 ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் = 2
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
சுரைக்காய் தோல் சீவிக் கொள்ளவும். பொடியாக நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை பெருங்காயம், மஞ்சள் பொடி சேர்த்து குழைய வேக விடவும். பச்சை மிளகாயை நீளவாட்டில் கீறிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். கடைசியாக பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து சுரைக்காய் சேர்த்து வதக்கவும்.
சிறிது வதக்கியதும் சீரகம், மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும். மேலும் சிறிது வதங்கியதும் உப்பு சேர்த்து சிறிதளவு நீரை தெளித்து மூடி வைத்து வேக விடவும்.
10 நிமிடம் கழித்து தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி கொத்தமல்லி சேர்த்து பரிமாறாவும்.
சுவையான சுரைக்காய் கூட்டு தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றோடு பரிமாறலாம்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சுரைக்காய் கூட்டு
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் சுரைக்காய்
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் பாசிப்பருப்பு கூட்டு
» சுரைக்காய் சுரைக்காய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum