பூசணிக்காய் பருப்பு
Page 1 of 1
பூசணிக்காய் பருப்பு
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- பூசணிக்காய் – 1/2கிலோ
- பெரிய வெங்காயம் – 1
- பெரிய தக்காளி -1
- மல்லி இலை -சிறிது
- கறிவேப்பிலை -சிறிது
- பச்சை மிளகாய் -2-4
- தேங்காய் – 4டேபிள்ஸ்பூன்
- பருப்பு – 100கிராம்
- மஞ்சள் தூள் – அரைடீஸ்பூன்
- சீரகத்தூள் – அரைடீஸ்பூன்
- பூண்டு பல் – 6
- கடுகு -தலா ஒரு டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு -தலா ஒரு டீஸ்பூன்
- எண்ணெய் – 2டேபிள்ஸ்பூன்
- மிளகாய் வற்றல் -2
- உப்பு – தேவைக்கு
செய்முறை:
- பருப்புடன், மஞ்சள் தூள், சீரகத்தூள், பூண்டு பல் தேவைக்கு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
- பூசணிக்காயை கட் செய்து அலம்பி வைக்கவும்.
- வெந்த பருப்புடன், நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூசணிக்காய், மல்லி இலை சேர்க்கவும். உப்பு சேர்க்கவும்.
- தேங்காய் துருவலுடன் மிளகாய் சேர்த்து பரபரவென்று அரைத்து கொள்ளவும்.
- அரைத்த தேங்காயை பூசணிக்காய் பருப்புடன் சேர்க்கவும், குக்கரை மூடி மீண்டும் ஒரு விசில் விடவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு,
மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு வெடிக்கவும், நறுக்கிய வெங்காயம்
சேர்த்து சிவற வதக்கி தாளித்ததை வெந்த பூசணி பருப்பில் கொட்டவும். கலந்து
விடவும். - இது சாதம், சப்பாத்திக்கு அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கு
மிகவும் பிடிக்கும். பூசணி துண்டுகள் பார்க்க கண்ணாடி போல் இருக்கும். இதனை
தடியங்காய் என்று சொல்வது வழக்கம். காயில் விதை முற்றாமல் இருந்தால்
அத்துடன் நறுக்கி சமைக்கலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பூசணிக்காய் பருப்பு
» பூசணிக்காய் பருப்பு
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் ஜுஸ் பூசணிக்காய் ஜுஸ்
» பூசணிக்காய் பருப்பு
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் பூசணிக்காய்
» பூசணிக்காய் ஜுஸ் பூசணிக்காய் ஜுஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum