பாகற்காய் புளிக்கறி
Page 1 of 1
பாகற்காய் புளிக்கறி
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- பாகற்காய் – 300கிராம்
- புளி -சிறிய எலுமிச்சை அளவு
- வெங்காயம்- 150கிராம்
- தக்காளி- 150கிராம்
- மசாலாதூள்- 2டேபிள்ஸ்பூன்
- எண்ணெய் -3டேபிள்ஸ்பூன்
- கடுகு – தலா அரைஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – தலா அரைஸ்பூன்
- வெந்தயம் – கால்ஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிது
- உப்பு – தேவைக்கு
செய்முறை:
- பாகற்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளி, வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும், புளி ஊற வைக்கவும்.
- குக்கரில் எண்ணெய் விட்டு காயவும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து வெடிக்கவிடவும்.
- கருவேப்பிலை சேர்க்கவும்.
- நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
- பின்பு நறுக்கிய பாகற்காய் போட்டு நன்கு பிரட்டி சிறிது உப்பு போடவும்.
- பின்பு தக்காளி சேர்த்து சிறிது மூடி வைத்து அத்துடன் மசாலாத்தூள்
சேர்த்து பிரட்டி கெட்டியாக புளிக்கரைசல் விடவும். உப்பு சரி பார்க்கவும்.
நன்கு கொதிவந்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும். - இது சாதத்துடன் தொட்டு கொள்ள,கலந்து சாப்பிடவும், சப்பாத்திக்கும்
அருமையாக இருக்கும். அதிக கசப்பு தெரியாது. தேங்காய் சேர்க்க விரும்பினால்
அரைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து கொள்ளலாம். - பாகற்காய் புளிக்கறியை சாதம் அவித்த முட்டை, பருப்பு ரசம், அப்பளத்துடன் பரிமாற சுவை பிரமாதம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாகற்காய் புளிக்கறி
» பாகற்காய் தக்காளிப் புளிக்கறி
» பாகற்காய் கறி
» வாழைக்காய் புளிக்கறி
» வாழைக்காய் புளிக்கறி
» பாகற்காய் தக்காளிப் புளிக்கறி
» பாகற்காய் கறி
» வாழைக்காய் புளிக்கறி
» வாழைக்காய் புளிக்கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum