பாகற்காய் புளிக்கறி
Page 1 of 1
பாகற்காய் புளிக்கறி
தேவையானப்பொருட்கள்:
பாகற்காய் – 300கிராம்
புளி -சிறிய எலுமிச்சை அளவு
வெங்காயம்- 150கிராம்
தக்காளி- 150கிராம்
மசாலாதூள்- 2டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -3டேபிள்ஸ்பூன்
கடுகு – தலா அரைஸ்பூன்
உளுத்தம்பருப்பு – தலா அரைஸ்பூன்
வெந்தயம் – கால்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கு
செய்முறை:
பாகற்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளி, வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும், புளி ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காயவும், கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து வெடிக்கவிடவும்.
கருவேப்பிலை சேர்க்கவும்.
நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின்பு நறுக்கிய பாகற்காய் போட்டு நன்கு பிரட்டி சிறிது உப்பு போடவும்.
பின்பு தக்காளி சேர்த்து சிறிது மூடி வைத்து அத்துடன் மசாலாத்தூள் சேர்த்து பிரட்டி கெட்டியாக புளிக்கரைசல் விடவும். உப்பு சரி பார்க்கவும். நன்கு கொதிவந்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
இது சாதத்துடன் தொட்டு கொள்ள,கலந்து சாப்பிடவும், சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும். அதிக கசப்பு தெரியாது. தேங்காய் சேர்க்க விரும்பினால் அரைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து கொள்ளலாம்.
பாகற்காய் புளிக்கறியை சாதம் அவித்த முட்டை, பருப்பு ரசம், அப்பளத்துடன் பரிமாற சுவை பிரமாதம்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பாகற்காய் புளிக்கறி
» பாகற்காய் பாகற்காய்
» பாகற்காய் பாகற்காய்
» வாழைக்காய் புளிக்கறி
» வாழைக்காய் புளிக்கறி
» பாகற்காய் பாகற்காய்
» பாகற்காய் பாகற்காய்
» வாழைக்காய் புளிக்கறி
» வாழைக்காய் புளிக்கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum