பாகற்காய் கறி
Page 1 of 1
பாகற்காய் கறி
தேவையான பொருள்கள்:
பாகற்காய் = 250 கிராம்
சின்ன வெங்காயம் = 100 கிராம்
இஞ்சி = கால் அங்குலம்
பூண்டு = 10 பல்
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
எண்ணெய் = 1 கரண்டி
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
பாகற்காயை நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுதாக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் சீரகம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வதங்கி பச்சை வாசனை போனதும் மிளகாய் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து மேலும் வதக்கி பாகற்காய் சேர்த்து உப்பு போட்டுக் கொண்டு மூடி வைத்து வேக விடவும்.
5 நிமிடம் வெந்ததும் திறந்து மேலும் சுருள வதக்கி எண்ணெய் சிறிது பிரிந்து வந்ததும் இறக்கி கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
சுவையான பாகற்காய் கறி தயார். இது சிறிதளவே கசப்பிருக்கும். இதை ரைஸ், பரோட்டா, சப்பாத்தி போன்றவற்றோடு பரிமாறலாம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum