பீட்ரூட் பாசிப்பருப்பு பொரியல்
Page 1 of 1
பீட்ரூட் பாசிப்பருப்பு பொரியல்
தேவையானப்பொருட்கள்:
செய்முறை:
- பீட்ரூட் – 300 கிராம்
- வெங்காயம் – 100 கிராம்
- பாசிப்பருப்பு- 50 கிராம்
- மிளகாய் வற்றல் – 4
- சீரகம்- அரைடீஸ்பூன்
- தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
- எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
- கடுகு – அரைடீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – அரைடீஸ்பூன்
- கறிவேப்பிலை
- மல்லி இலை – சிறிது
- உப்பு – தேவைக்கு
செய்முறை:
- பீட்ரூட்,வெங்காயம் தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாசிப்பருப்பை லேசாக வெதுப்பி உதிரியாக வேக வைத்து எடுக்கவும். சீரகம், 3
மிளகாய் வற்றல் மிக்சியில் சுற்றி, அத்துடன் தேங்காய் சேர்த்து பரபரவென்று
அரைத்து வைக்கவும். - வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு,
மிளகாய் வற்றல் கிள்ளி போட்டு, கறிவேப்பிலை போட்டு வெடிக்கவும், நறுக்கிய
வெங்காயம், பீட்ரூட் சேர்த்து வதக்கவும். சிறிது மூடி விடவும். - பீட்ரூட் வதங்கியதும் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்க்கவும், சிறிது
உப்பு சேர்க்கவும், சிறிது உப்பு கூடினாலும் கடுத்தது போல் ஆகிவிடும். - அரைத்த தேங்காய், மிளகாய்வற்றல், சீரகம் விழுதை சேர்க்கவும். நன்றாக பிரட்டி பச்சை வாடை போக விடவும்.
- நறுக்கிய மல்லி இலை தூவவும்.
- சுவையான சத்தான பீட்ரூட் பொரியல் ரெடி.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பீட்ரூட் பாசிப்பருப்பு பொரியல்
» பீட்ரூட் பாசிப்பருப்பு பொரியல்
» பீட்ரூட் பொரியல்
» பீட்ரூட் மசால் பொரியல்
» பாசிப்பருப்பு!
» பீட்ரூட் பாசிப்பருப்பு பொரியல்
» பீட்ரூட் பொரியல்
» பீட்ரூட் மசால் பொரியல்
» பாசிப்பருப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum