பருப்பு முருங்கைக்காய்
Page 1 of 1
பருப்பு முருங்கைக்காய்
தேவையானப்பொருட்கள்:
தாளிக்க:
செய்முறை:
- துவரம் பருப்பு – 150 கிராம்
- முருங்கைக்காய் - 2
- பெரிய வெங்காயம் - 100 கிராம்
- தக்காளி -100 கிராம்
- மிளகாய் – 2,
- மல்லி இலை – சிறிது
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் –அரைஸ்பூன்
- மஞ்சள் தூள் –கால்ஸ்பூன்
- சீரகத்தூள் –கால்ஸ்பூன்
- உப்பு-தேவைக்கு
தாளிக்க:
- நல்லெண்ணெய் – 1டேபிள்ஸ்பூன்
- நெய் – 1 டீஸ்பூன்
- கடுகு-அரைஸ்பூன்
- மிளகாய் வற்றல் -2
- கறிவேப்பிலை -2 இணுக்கு.
செய்முறை:
- குக்கரில் பருப்பு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், இஞ்சிபூண்டு பேஸ்ட், மசாலாத்தூள், மல்லி இலை, மிளகாய் சேர்க்கவும்.
- பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு ஒரு கப் அதிகம் விடவும். குக்கரை மூடி 4 விசில் விடவும்.
- ஆவி அடங்கிய பின்பு குக்கரை திறந்து பார்த்தால் பருப்பு வெந்திருக்கும்.
- அத்துடன் கட் செய்த முருங்கைக்காயையும், உப்பையும் சேர்க்கவும்.
- மீண்டும் குக்கரை மூடி ஒரு விசில் வைத்தால் முருங்கைக்காய் பக்குவமாக வெந்துவிடும்.
- பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.
- கமகமக்கும் சுவையான பருப்பு முருங்கைக்காய் ரெடி. முருங்கைக்காய் சாப்பிட வெண்ணெய் மாதிரி இருக்கும்.</li>
இதனை சாதம் சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பருப்பு முருங்கைக்காய்
» பருப்பு முருங்கைக்காய்
» முருங்கைக்காய் வடை
» முருங்கைக்காய் கறி
» முருங்கைக்காய் அவல் கறி
» பருப்பு முருங்கைக்காய்
» முருங்கைக்காய் வடை
» முருங்கைக்காய் கறி
» முருங்கைக்காய் அவல் கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum