புதினா பொடி
Page 1 of 1
புதினா பொடி
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் – ஒரு கப்
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன் (கட்டிப் பெருங்காயமாக இருந்தால் – 1 கட்டி)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – சிறிதளவு.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு பெருங்காயத்தைப் போட்டு பொரிந்ததும் எடுத்துக்கொள்ளவும். அந்த எண்ணெயிலேயே உளுத்தம்பருப்பு, மிளகு போட்டு மிளகு வெடித்ததும் அடுப்பை அணைத்துவிடவும். வாணலி சூடாக இருக்கும்போதே புதினாவைப் போட்டு அப்படியே ஒரு புரட்டி புரட்டி வைக்கவும். மிக்ஸியின் சிறிய ஜாரில் முதலில் உளுத்தம்பருப்பு, மிளகு, பெருங்காயம் ஆகியவற்றை போட்டு அரைத்துக்கொண்டு பிறகு அதோடு புதினாவையும் போட்டு அரைக்கவேண்டும்.
இந்தப் பொடியை சூடான சாதத்தில் போட்டு, நெய் அல்லது எண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடலாம். ரசம் வைத்து இறக்கும்போது, ஒரு ஸ்பூன் புதினாப்பொடி போடலாம்.
குறிப்பு: மேலே சொன்ன முறையில் வறுத்து அரைத்தால்தான் பொடி நல்ல பச்சை நிறத்தில் வரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum