திரிகடுகம் ரசம்
Page 1 of 1
திரிகடுகம் ரசம்
தேவையான பொருட்கள்:
கொள்ளு – அரை கப்
சுக்கு – 10 கிராம்
மிளகு – 10 கிராம்
திப்பிலி – 5 கிராம் (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்)
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – தலா அரை டீஸ்பூன்
சீரகம் – தலா அரை டீஸ்பூன்
செய்முறை:
ஒரு டம்ளர் தண்ணீரில் கொள்ளைப் போட்டு 5 நிமிடம் கொள்ளு வெந்ததும் அந்தத் தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும். திப்பிலியை வெறும் வாணலியில் வறுத்து சுக்கு, மிளகுடன் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும்.
புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு (கரைக்கக் கூடாது). அத்துடன் உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்ததும், தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுக்கவும்.
புளி கொதித்த தண்ணீரையும் கொள்ளு வேக வைத்த தண்ணீரையும் கலந்து அதோடு தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்க்கவும். பொடித்து வைத்திருக்கும் பொடியைப் போட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும் (அதற்கு மேல் கொதித்தால் சுவை மாறிவிடும்). எண்ணெயில் கடுகு, சீரகம் தாளிக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum