மைசூர் ரசம்
Page 1 of 1
மைசூர் ரசம்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 1/4 கப்
தக்காளி – 1 அல்லது 2
புளி – எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
உப்பு[ – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கொத்துமல்லி இலை – சிறிது
தனியா – 2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4 முதல் 5 வரை
நெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
துவரம் பருப்பைக் கழுவி, தேவையான தண்ணீரும், சிறிது மஞ்சள் தூளும் சேர்த்து குழைய வேக வைத்து, நன்றாக மசித்து விட்டு அதில் மேலும் சிறிது வென்னீரைச் சேர்த்து, நீர்க்க கரைத்து வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்து, கரைத்து 2 கப் அளவிற்கு புளித்தண்ணீரை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பு,தனியா,மிளகு,காய்ந்த மிளகாய் ஒவ்வொன்றையும், தனித்தனியாக, ஒரு டீஸ்பூன் எண்ணையில் சிவக்க வறுத்தெடுத்து, ஆறவிட்டு, சிறிது தண்ணீரைச் சேர்த்து, சற்று கொரகொரப்ப்பாக அரைத்தெடுக்கவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் புளித்தண்ணீர், பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தக்காளி நன்றாக வெந்து, புளியின் பச்சை வாசனையும் போனவுடன், அரைத்து வைத்துள்ள விழுதினை சிறிது நீருடன் கலந்து ஊற்றவும். உப்பு சரி பார்த்து, கொத்து மல்லி இலையைச் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
பின்னர் அத்துடன் பருப்புத் தண்ணீரைச் சேர்த்து, மூடி வைத்து ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைத்து, அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை, நெய்யில் தாளித்துக் கொட்டவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum