வாழைப்பூ வடகறி
Page 1 of 1
வாழைப்பூ வடகறி
தேவையான பொருள்கள்:
வாழைப்பூ = 1
வெங்காயம் = 100கிராம்
பச்சை மிளகாய் = 2
தக்காளி = 4
இஞ்சி = சிறிய துண்டு
சோம்பு = 1 ஸ்பூன்
பட்டை = 2
கிராம்பு = 2
தேங்காய் = அரை மூடி
பொட்டுக் கடலை = 3 ஸ்பூன்
மிளகாய் பொடி = 1 ஸ்பூன்
தனியா பொடி = அரை ஸ்பூன்
மஞ்சள் பொடி = கால் ஸ்பூன்
கரம் மசாலா பொடி = அரை ஸ்பூன்
எண்ணெய் = 4 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
வாழைப்பூவை ஆய்ந்து நறுக்கி நீரில் போடவும். வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கவும். இஞ்சி தோல் சீவி தட்டிக் கொள்ளவும். சோம்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை பொடி செய்யவும்.
தேங்காயைத் துருவி பொட்டுக் கடலை, தக்காளி வைத்து அரைத்துக் கொள்ளவும்.
நறுக்கிய வாழைப்பூவை வெங்காயம், பச்சை மிளகாய், பாதி மிளகாய் பொடி, உப்பு சேர்த்து பொடித்த சோம்பு, பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பிசையவும். இதை இடியாப்ப மாவு போல பிசைந்துக் கொண்டால் போதும். அதிக தண்ணீர் தேவை இல்லை.
இதை இட்லி தட்டில் அள்ளி வைத்து இடியாப்பம் வேக வைப்பது போல் வேக விட்டுக் கொள்ளவும். சிறிது ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து உப்பு சேர்த்து கரம் மசாலா பொடி, தனியா பொடி, மீதி மிளகாய் பொடி மஞ்சள் பொடி சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு 2 நிமிடம் மூடி கொதிக்க விடவும்.
திறந்து இதனோடு வாழைப்பூவைச் சேர்த்து கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும்.
சுவையான வாழைப்பூ வடகறி தயார். இதை ரைஸ், சப்பாத்தி, பரோட்டா, நூடுல்ஸ், உப்புமா, அடை போன்றவற்றுடன் பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
வாழைப்பூ குறைவான சர்க்கரை அளவு கொண்டது. சோடியம் குறைவாக மற்றும் வைட்டமின் A, பொட்டாசியம், மற்றும் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளது. அதிக ஊட்டச்சத்து மிக்கது. மலச்சிக்கல் குறையும்.
உடல் எடை, இரத்த அழுத்தம், இரத்த சோகை ஆகியவை குறையும். எலும்புகள் ஆரோக்கியம் பெறும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum