உருளைக்கிழங்கு பச்சடி
Page 1 of 1
உருளைக்கிழங்கு பச்சடி
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு = அரை கிலோ
தயிர் = 200 கிராம்
பச்சை மிளகாய் = 4
சின்ன வெங்காயம் =50 கிராம்
இஞ்சி = சிறிது
சீரகப்பொடி = அரை ஸ்பூன்
பெருங்காயப் பொடி = சிறிது
கடுகு = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் = 2
எண்ணெய் = 2 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக விட்டு உரித்துக் கொண்டு மசித்துக் கொள்ளவும். இதனோடு உப்பு, சீரகப்பொடி, பெருங்காயப்பொடி கலந்து மசிக்கவும். தயிரைக் கடைந்து வைக்கவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தோல் நீக்கிய இஞ்சி பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்கும் போது கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்கவும். இதோடு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
அடுத்து மசிந்த உருளைக்கிழங்கைப் போட்டு லேசாகக் கலக்கவும். இதனோடு கடைந்த தயிரைக் கலக்கவும். சிறிது கொத்தமல்லி சேர்க்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு பச்சடி தயார். இதை ரைஸோடும் குறிப்பாக சாம்பார் சாதத்தோடு, பிரியாணி, புலாவ், பொங்கல், இட்லி, தோசை, பூரி, நூடுல்ஸ் ஆகியவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
உருளைக்கிழங்கில் வைட்டமின் A, வைட்டமின் C, வைட்டமின் B6, தாமிரம், மாங்கனீசு, மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
உருளைக்கிழங்கு ஆற்றல் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவு. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். செரிமானம், வயிற்று புண்கள் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» உருளைக்கிழங்கு கறி
» உருளைக்கிழங்கு பச்சடி
» உருளைக்கிழங்கு பச்சடி
» உருளைக்கிழங்கு பச்சடி
» பழ பச்சடி பழ பச்சடி
» உருளைக்கிழங்கு பச்சடி
» உருளைக்கிழங்கு பச்சடி
» உருளைக்கிழங்கு பச்சடி
» பழ பச்சடி பழ பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum