கத்தரிக்காய் பொரியல்
Page 1 of 1
கத்தரிக்காய் பொரியல்
தேவையான பொருள்கள்:
கத்தரிக்காய் = அரை கிலோ
சின்ன வெங்கயம் = 50 கிராம்
பச்சை மிளகாய் = 4
கடுகு = அரை ஸ்பூன்
சீரகம் = அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு = 1 ஸ்பூன்
கடலை பருப்பு = 1 ஸ்பூன்
தேங்காய் துருவல் = 3 ஸ்பூன்
எண்ணெய் = 3 ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
செய்முறை:
கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இதனோடு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும் கத்தரிக்காய் சேர்த்து இதையும் சிறிது வதக்கி ஒரு கப் நீர் விட்ட பின் உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.
10 நிமிடத்தில் காய் வெந்து விடும். இடையில் ஒரு முறை கிளறி விடவும். இதனோடு தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்.
சுவையான கத்தரிக்காய் பொரியல் தயார். இதை எல்லா விதமான ரைஸோடும் பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
கத்தரிக்காயில் கார்போஹைட்ரேட்டுகள் 17.8g, புரதம் 8g, நார்ச்சத்து 4.9g, கொழுப்பு 27.5g, கொலஸ்ட்ரால் 16mg, சர்க்கரை 11.4g, இரும்பு 6mg, வைட்டமின் “A” 6.4 மி.கி, கால்சியம் 525 மி.கி, சோடியம் 62mg மற்றும் பொட்டாசியம் 618mg காணப்படுகிறது.
இவற்றில் ஊட்டச்சத்து அதிகம் காணப்படுவதால் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, காய்ச்சல் ஆகியவற்றை குறைக்கும். எனவே இந்த கத்தரிக்காய் பொரியலை சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum