தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நடிகர் பிருத்விராஜிடம் லஞ்சம் வாங்கிய நிஜ போலிஸார்!

Go down

நடிகர் பிருத்விராஜிடம் லஞ்சம் வாங்கிய நிஜ போலிஸார்! Empty நடிகர் பிருத்விராஜிடம் லஞ்சம் வாங்கிய நிஜ போலிஸார்!

Post  ishwarya Fri Apr 12, 2013 5:20 pm

மொழி படத்தில் கதாநாயகனாக நடித்தவர் மலையாள நடிகர் பிருத்விராஜ். இவர் தற்போது ‘இந்தியன் ருப்பி’ என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புக்காக கர்நாடகா சென்றபோது, அம்மாநில போலிஸார் இவரிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர்.

அதன் முழுவிபரம் வருமாறு: இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் குண்டல் பேட் பகுதியில் நடந்து வருகிறது. இந்த இடம் கேரள எல்லையான பத்தேரி அருகே உள்ளது. அங்குள்ள குண்டல்பேட் சோதனைச்சாடியில் போலீசார் வாகனங்களை நிறுத்தி லஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அதன் வழியே வந்த நடிகர் பிருத்விராஜிடமும் லஞ்சம் கேட்டார்கள்.

இது குறித்து பிருத்விராஜ் கூறியதாவது:

“கர்நாடக மாநிலம் குண்டல்பேட் பகுதிக்கு படப்பிடிப்புக்காக அடிக்கடி சென்று வந்தேன். அங்குள்ள சோதனைச் சாவடியை கடக்கும் போதெல்லாம் போலீசாருக்கு ரூ.200 லஞ்சம் கொடுத்தேன். ஒரு தடவை லஞ்சம் கொடுக்க மறுத்தபோது, படப்பிடிப்புக்காக வைத்திருந்த போலீஸ் சீருடை, தொப்பி, லத்தி போன்றவற்றை கர்நாடக போலீசார் எடுத்துச்சென்று விட்டனர். பணம் கொடுத்த பிறகு அதை திருப்பி தந்தார்கள். இது குறித்து கர்நாடக அரசுடன் கேரள அரசு பேச வேண்டும்’’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» லஞ்சம் கேட்கும் சென்சார் போர்டு: அமீரின் பரபரப்பு குற்றச்சாட்டு
» ரஹ்மான் லஞ்சம் கொடுத்து விருது பெறவில்லை-ஆஸ்கர் குழு பதில்
» இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினை லஞ்சம் - தலாய் லாமா
» டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து
» லஞ்சம் கேட்கும் சென்சார் போர்டு: அமீரின் பரபரப்பு குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum