தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

டைரக்டர் விஜய்யுடன் காதலா?அமலாபால் பேட்டி

Go down

டைரக்டர் விஜய்யுடன் காதலா?அமலாபால் பேட்டி Empty டைரக்டர் விஜய்யுடன் காதலா?அமலாபால் பேட்டி

Post  ishwarya Fri Apr 12, 2013 4:44 pm

“மைனா”வுக்கு பின் அமலாபால் முன்னணி நடிகையாகியுள்ளார். சமீபத்தில் விக்ரமுடன் நடித்த தெய்வத்திருமகள் படம் ரிலீசாகி அவரை மேலும் பிரபலப்படுத்தியது. முப்பொழுதும் உன் கற்பனைகள், வேட்டை படங்களிலும் நடித்து வருகிறார்.

அமலாபாலுக்கும் இயக்குனர் விஜய்க்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசு பரவியுள்ளது. தெய்வத்திருமகள் படத்தை டைரக்டு செய்தவர் விஜய், இவர் ஏற்கனவே ஹிட்டான மதராசபட்டணம் படத்தையும் இயக்கியவர். தெய்வத்திருமகள் படத்தின் படப்பிடிப்பில் அமலாபால், விஜய் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தெய்வத் திருமகள் படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து பங்கேற்றனர்.

விஜய்யின் தந்தையும் பட அதிபருமான ஏ.எல். அழகப்பன் மணிவிழா இரு தினங்களுக்கு முன் நடந்தது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வந்தார்.

விஜய்யுடன் காதலா என்று அமலாபாலிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- நானும் விஜய்யும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் நட்பை தவிர வேறு எதுவும் இல்லை. காதல் திருமணம் பற்றியெல்லாம் சிந்திக்க உகந்த நேரம் இது வல்ல. நடிப்புக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறேன். திருமணத்துக்கு முன் 100 படங்களிலாவது நடிக்க வேண்டும் என்று திட்டம் வைத்துள்ளேன். இவ்வாறு அமலாபால் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» பாக்கியராஜ் மகன் சாந்தனுவுடன் காதலா? சந்தியா பேட்டி
» ஆங்கில படங்களை காப்பி அடிக்கும் இயக்குனர்களின் கதையா? : டைரக்டர் பேட்டி
» நடிகை அஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார்: டைரக்டர் களஞ்சியம் பேட்டி
» ‘சிங்கம்-2’ படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடக்கம்: சொந்த ஊரில் டைரக்டர் ஹரி பேட்டி
» சாய்பாபா படத்தில் தெண்டுல்கரை நடிக்க வைக்க முயற்சி; டைரக்டர் கோடி ராமகிருஷ்ணா பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum