தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ருதி சிறந்த இசை அமைப்பாளர் – ஹாரீஸ் ஜெயராஜ்

Go down

ஸ்ருதி சிறந்த இசை அமைப்பாளர் – ஹாரீஸ் ஜெயராஜ் Empty ஸ்ருதி சிறந்த இசை அமைப்பாளர் – ஹாரீஸ் ஜெயராஜ்

Post  ishwarya Fri Apr 12, 2013 2:54 pm

கமல் மகள் ஸ்ருதி சிறந்த இசை அமைப்பாளர் என்று பிரபல இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் பாராட்டினார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:

“உன்னைப்போல் ஒருவன்” படத்துக்கு ஸ்ருதி இசை அமைத்து இருந்தார். அது என்னை மிகவும் கவர்ந்தது. அவருக்கு நன்றாக பாடக் கூடிய குரல் வளமும் இருக்கிறது. இந்தியாவில் உள்ள மிகச்சிறந்த பாடகிகளில் ஒருவராக அவர் இருக்கிறார். ஸ்ருதியின் தந்தை கமல் இசை ஞானம் உள்ளவர். எனவே தான் ஸ்ருதி இயற்கையிலேயே இசையில் திறமை படைத்தவராக உள்ளார்.

ஸ்ருதி நடிப்பதோடு நின்று விடாமல் இசை அமைக்கவும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். “7-ஆம் அறிவு” படத்தில் மிகவும் சிரமப்பட்டு இசை அமைத்துள்ளேன். 6-ஆம் நூற்றாண்டில் நடக்கும் சம்பவத்தில் வரும் பாடலொன்றுக்காக அந்த காலத்து இசைக்கருவிகளை வாங்க சீனாவில் தேடி அலைந்தேன்.

பழைய இசைக்கருவிகளை தேடி ஆறு கிலோ மிட்டர் நடந்தே சென்றேன். என்னோடு சேர்ந்து எனது அம்மாவும் வந்தார். அங்கு பழைய இசைக்கருவிகள் இருந்தன. அவற்றை ஏலம் விட்டார்கள். பெரிய பணக்காரர்களுடன் போட்டி போட்டு நான் ஏலத்தில் எடுத்தேன். அப்படி வாங்கிய கருவிகளை இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
»  இசை அமைப்பாளர் ஆனார் விஜய் யேசுதாஸ்
» இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா திடீர் திருமணம்; திருப்பதியில் இன்று நடந்தது
» ரூ.2 கோடி கேட்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்
» 100 ஆண்டு சினிமாவில் சிறந்த நட்சத்திரங்களாக கமல்- சாவித்திரி, ஸ்ரீதேவி தேர்வு- சிறந்த படம் நாயகன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum