‘ஒஸ்தி’ தயாரிப்பாளரின் கவலை !
Page 1 of 1
‘ஒஸ்தி’ தயாரிப்பாளரின் கவலை !
கோடிக்கணக்கில் செலவு செய்து, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு அதி நவீன தொழில்நுட்பத்தோடு தரமான படங்களை உருவாக்கினாலும் பெரும்பாலான திரையரங்குகளில் நிர்ணயிக்கப்பட்ட தரம் மற்றும் நெறிமுறைகளுக்கு குறைவான புரொஜக்டர்களே பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், உருவாக்கப்பட்ட தரத்தில் படத்தை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாறும் நிலை இருப்பதாக ஆதங்கப்படுகிறார் ‘உத்தமபுத்திரன்’ மற்றும் ‘ஒஸ்தி’ ஆகிய படங்களின் தயாரிப்பாளர் ரமேஷ்.
தரக்குறைவான புரொஜக்டர்களால் ரசிகர்கள் சிறந்த தரத்தில் படங்களை பார்த்து ரசிக்க முடியாமல் போவதோடு கண்களுக்கும் காதுகளுக்கும் பலவிதமான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்தார். படங்களை திரையிடுவதற்கு என்று உள்ள சர்வதேச நிர்ணயங்களுக்கு ஏற்றதாக இல்லாத தரக்குறைவான புரொஜக்டர்கள் பயன்படுத்தப்படுவது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிடப் போவதாகவும் கூறுகிறார்.
மேலும் அவர் ” படங்களை திரையரங்குகளில் திரையிடுவதற்கு என்று விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளும் இருக்கின்றன. திரையரங்குகளில் படங்களை காண்பிக்க குறிப்பிட்ட அளவு துல்லியம் மிக்க புரொஜக்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விதிகள் இருக்கின்றன. அதாவது 4கே அளவிலான துல்லியம் கொண்ட புரொஜக்டர்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
திரைப்படங்கள் தொடர்பான தொழில்நுட்ப விஷயங்களை நெறிப்படுத்தும் ஹாலிவுட் அமைப்பான ‘எஸ் எம் பி டி ஈ’ வலியுறுத்தும் இந்த நெறிமுறைகளுக்கு உட்பட்டே திரையரங்குகளில் படங்கள் திரையிடப்பட வேண்டும். உலகம் முழுவதும் இந்த விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.இந்தியாவிலும் கூட திரைப்படங்கள் தொடர்பான சட்டம் இவற்றை வலியுறுத்துகின்றன.
ஆனால் சமீப காலமாக பல திரையரங்குகளில் இவை பின்பற்றப்படவில்லை என்பது தான் வேதனை. பெரும்பாலான திரையரங்குகளில் 1 கேவுக்கும் குறைவான காட்சியை தரக்கூடிய புரொஜக்டர்களே இருக்கின்றன. முன்னணி திரையரங்குகளில் சிலவும் இதற்கு விதிவிலக்கல்ல! ஒரு சில மல்டிபிலக்ஸ் அரங்குகளில் ஒரு திரை தவிர மற்றவற்றில் தரக்குறைவான புரொஜக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், படங்கள் புள்ளி புள்ளியாக தெரியலாம். சினிமா ரசிகர்கள் உயர்ந்த தரத்தில் காட்சிகளை பார்க்க முடியாமல் போகிறது. தயாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் முதல் போட்டு அதிநவீன தொழில்நுட்பத்தில் படம் எடுத்தாலும் அதன் உண்மையான நோக்கம் நிறைவேறுவதில்லை.
அது மட்டும் அல்ல; இப்படி தரக்குறைவான முறையில் படங்களை பார்ப்பதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படலாம். அனுமதிக்கப்பட்ட ஒலி அளவுகளை விட கூடுதல் ஒலி அளவால் காதுகள் பாதிக்கப்படலாம். அதிலும் குறிப்பாக குழந்தைகளின் மென்மையான செவிகளுக்கு இவை ஏற்றதல்ல. மேலை நாடுகளில் திரையரங்குகளில் ஒலி அளவை கண்காணிக்க மீட்டர் பொருத்தியிருப்பார்கள். இங்கு இது பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.
குறிப்பிட்ட சில திரையரங்குகள் தவிர மற்றவற்றில் தரக்குறைவான புரொஜக்டர்களே இருக்கின்றன. இந்த புரொஜக்டர்கள் திரையரங்குகளில் திரையிட ஏற்றவை அல்ல. கருத்தரங்கு போன்றவற்றில் பயன்படுத்த மட்டுமே உகந்தவை. ஆனால் திரையிடல் தொழிலை கைக்குள் வைத்திருக்கும் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் இத்தகைய தரக்குறைவான புரொஜக்டர்களை விநியோகித்து வருகின்றன. இதானல் ரசிகர்கள் தான் ஏமாற்றப்படுகின்றனர்.
திரையரங்குகளில் விதிமுறை மீறப்படுவது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த நிறுவனங்கள் சார்பில் செல்வாக்கு மிக்க பெண் வழக்கறிஞர் ஆஜராகி வாதிட்டுள்ளர் என்பது வேதனையானது. இதில் மேலும் வேதனை என்னவென்றால் வங்க தேசம் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இந்த நிறுவனங்கள் தரக்குறைவான புரொஜக்டர்களை பயன்படுத்தியதால் வெளியேற்றப்பட்டு விட்டன என்பது தான். ஆனால இந்தியாவில் இவை சுதந்திரமாக செயல்படுகின்றன. இது ஏன்?
சில நிறுவனங்கள் லாப நோக்கிற்காக மோசமான புரோஜக்டர்களை விநியோகித்து வருவதால் படம் எடுக்கும் தயாரிப்பளர்களும் பாதிக்கப்படுகின்றனர். ரசிகர்களும் ஏமாற்றப்படுகின்றனர். இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட உள்ளேன்.
திரையுலக் பிரமுகர்கள் குறிப்பாக ஃபிக்கி போன்ற அமைப்பில் பொறுப்பில் உள்ளவர்கள் இது குறித்து மௌனமாக இருப்பது ஏன் என்று தெரியவில்லை. திரையுலகை காப்பாற்ற, ரசிகர்களை பாதுகாக்க திரையிடல் தொடர்பான விதிமுறைகள் கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தயாரிப்பாளரின் மகன் கதாநாயகனாகிறார்
» ஒஸ்தி – திரை விமர்சனம்
» ஒஸ்தி, மம்பட்டியான் படங்களுக்கு சிக்கல்
» அடை மழை காரணமாக மீண்டும் தள்ளிப்போன ஒஸ்தி
» ‘ஒஸ்தி’ – அருவா மீசை சிம்பு போட்டோக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum