தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒரு கோடி கொடுங்க…சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Go down

ஒரு கோடி கொடுங்க…சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி Empty ஒரு கோடி கொடுங்க…சத்யராஜ் கொடுத்த அதிர்ச்சி

Post  ishwarya Fri Apr 12, 2013 1:46 pm

யார் வந்து வில்லனாக நடிக்க அழைத்தாலும் அவர்களே மூர்ச்சையாகிற அளவுக்கு சம்பளத்தை கேட்டு அதிர வைப்பது சத்யராஜின் ஸ்டைல். அதுவே ஹீரோ ரோல் என்றால் பெருமளவு சம்பளத்தை குறைத்துக் கொள்ளவும் சார் ரெடி. சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இவரைதான் அழைத்தார் ஷங்கர். இந்த அழைப்புக்கு சத்யராஜ் சொன்ன பதில் அவ்வளவு சாந்தமாக இல்லை என்பதால்தான் சுமன் வந்தார் அவரிடத்திற்கு.

ஆனால் கே.வி.ஆனந்த் அழைத்தபோது அந்தளவுக்கு கோபத்தை காட்டவில்லையாம் சத்யராஜ். ஒரு கோடி கொடுங்க. நடிக்கலாம் என்று கூலாக சிரித்து வைக்க, ஐயோ பாவம். ஆனந்த்துதான் சிரிப்பை தொலைத்தார்.

ஒரு விக்குக்காக பிரகாஷ்ராஜை சண்டை போட்டு அனுப்பி வைத்த கே.வி.ஆனந்த் அதே கேரக்டரில் நடிக்க வைக்கலாம் என்றுதான் இவரை அழைத்தாராம். ஒரு கோடி அதிர்ச்சியில் இப்போது வேறொருவரை நடிக்க வைத்திருக்கிறார். (ஏம்ப்பா ஷுட்டிங்கே பாதி முடிஞ்சு போச். இப்போ போய் சொல்றீயே என்பவர்களுக்கு… நியூஸ் இப்பதான் லீக் ஆச்சுதுங்கோவ்)

இன்னொரு செய்தி. வெங்காயம் படத்தை இயக்கிய ராச்குமார் அடுத்து சிபிராஜ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum