எந்திரன் ஓராண்டு நிறைவு… கொண்டாடும் ரசிகர்கள்!
Page 1 of 1

இந்திய சினிமாவில் சிகரம் தொட்ட படம் என்றால் இன்றைய தேதிக்கு ரஜினியின் எந்திரன்தான்.
மொழிகளைத் தாண்டி, மாநில எல்லைகள் கடந்து ஏபிசி என ‘ஆல் க்ளாஸிலும்’ வசூலில் பின்னியெடுத்த படம் இது. முதல் 10 வாரங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக ரூ 375 கோடியை வசூலாகக் குவித்தது எந்திரன். வெளிநாடுகளில் ரூ 75 கோடிக்கும் மேல் வசூலித்த ஒரே இந்தியப் படமும் எந்திரன்தான்.
33 நாடுகள், மொத்தம் 3000 திரையரங்குகள், இந்தியாவில் மட்டுமே 2000 அரங்குகளுக்கு மேல், ஆந்திரத்தில் மட்டும் 700 திரைகள்…. என இந்தியத் திரையுலகே அதிரும் வகையில் வெளியான படம் எந்திரன். வெளியாகி முதல் ஷோ முடிந்ததுமே படத்தின் பிரமாண்ட வெற்றி பறைசாற்றப்பட்டது இந்தப் படத்துக்கு மட்டுமே. எந்திரன் படம் இந்தியாவில் வெள்ளிவிழா கண்டது. வெளிநாடுகளில் பலவற்றில் 50 நாட்களும், இரு நாடுகளில் 100 நாட்களும் ஓடியது. இத்தனை அரங்குகளில் வெளியாகிய பிறகும் இவ்வளவு நாட்கள் ஓடுவது எத்தனை பெரிய அதிசயம் என்பது சினிமாக்காரர்களுக்குத்தான் தெரியும்!
இந்தப் படம் வெளியாகி கடந்த அக்டோபர் 1-ம் தேதியுடன் ஒரு வருடம் பூர்த்தியானது. இதையொட்டி, ரஜினியின் ரசிகர்கள் இந்தப் படத்தை பல்வேறு அரங்குகளில் சிறப்புக் காட்சியாக திரையிடவைத்து பார்த்து மகிழ்ந்தனர். சென்னை தவிர்த்து, திருச்சி போன்ற நகரங்களிலும் எந்திரனை மறுபடியும் திரையிடக் கோரி, முதல் நாள் முதல் காட்சியின் போது காட்டிய அதே உற்சாகத்துடன் பார்த்தனர்.
ரசிகர் மன்றத்தினர், எந்திரன் முதல் ஆண்டு நிறைவு தினத்தை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். சினிமா ஒன்றுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறை!
நீங்கள் விரும்பக்கூடியவை...

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எந்திரன் வெற்றி பெற 1305 படிகளை முட்டிபோட்டு ஏறிய சோளிங்கர் ரசிகர்கள்!
» அதிமுக அரசின் ஓராண்டு ‘சாதனை’: உஷ்ஷ்… அப்பப்பா, முடியல!
» 50-வது நாளைக் கொண்டாடும் அஜித்தின் ‘மங்காத்தா’
» பிறந்தநாள் கொண்டாடும் ஜி.வி.பிரகாஷ்
» கோடம்பாக்கமே கொண்டாடும் ஹன்சிகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum