தடைபட்ட திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்
Page 1 of 1
தடைபட்ட திருமணம் விரைவில் நடக்க பரிகாரம்
வலது கால் பெருவிரல் ரேகை ஜோதிடத்தை ஈரோடு அவல் பூந்துறையில் உள்ள காங்கயம் மெயின் ரோட்டைச் சேர்ந்த விஜய் சுவாமிஜி கணித்து சொல்கிறார். ( இவரது செல்போன்: 9443351497 ) பல்வேறு சினிமா மற்றும் டெலிவிஷன் நடிகர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு கால் ரேகையை பார்த்து பலன்கள் சொல்லி உள்ளார்.
இவர் வாசகர்களின் கேள்விகளுக்கு துல்லியமாக கணித்து பதில் கூறுகிறார். வாசகர்கள் கேள்விகளும், அதற்கு புதுமை ஜோதிடம் விஜய் சுவாமிஜி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- 4 பேர் சேர்ந்து கூட்டாக தொழில் செய்கிறோம். தனியாக பிரிந்து வந்து தொழில் செய்தால் நிலைக்குமா? (ராஜ், மயிலாப்பூர்)
பதில்:- உங்கள் கால் பெருவிரல் அமைப்பு கஜமுகமாக இருந்து ஒரே ஒரு வாகைக் கோடும் இருந்தால் தனித்தொழில் செய்யலாம். அவ்வாறு இல்லாவிட்டால் சேர்ந்தே இருங்கள்.
கே:- நான் அரசு ஊழியன் ஒரு சம்பளத்தில் குழந்தை குட்டிகளோடு சிரமப்படுகிறேன். பதவி உயர்வு எதிர் நோக்கியுள்ளேன். கிடைக்குமா? (ராணி, திருச்சி)
ப:- உங்கள் கால் பெருவிரல் அமைப்பு கலச முகமாக இருந்து சக்கரக் கோடுகள் இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். அதன் மூலம் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும்.
கே:- நான் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிள் சமீபத்தில் காணாமல் போனது. போலீசில் புகார் செய்துள்ளேன். திரும்ப கிடைக்குமா? (சாம், சங்கர்நகர்)
ப:- உங்கள் கால் பெருவிரல் அமைப்பு கலச முகமாக இருந்து மேற்புறம் வாகைக்கோடுகள் அமைந்திருந்தால் விரைவில் காணாமல் போன வண்டி கிடைக்கும். அவ்வாறு அமைப்பும், கோடுகளும் உள்ளதா என்பதை நேரில் சந்தித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கே:- என் உடலில் முகம், கை, கால், ஆகிய ஒரு சில இடங்களில் வெள்ளை படந்துள்ளது. வயது 35, முதிர்கன்னியாக உள்ளேன். திருமணம் நடக்குமா? (ஷீலா, கோவை)
ப:- உங்கள் கால் சார்ந்த தெய்வம் எது என்பதை முதலில் பாலாபிஷேகம் செய்து அதற்கு பின் சந்தன அபிஷேகம் செய்யுங்கள் அந்த சந்தனத்தை எடுத்து பூசிக்குளித்து அத்தெய்வத்தை வணங்கி வர உங்கள் மேனியில் உள்ள வெள்ளை நிறம் மாறும் அதன் பின் திருமணம் நடக்கும்.
கே:- எனக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது, உள்ளூரில் பிறரிடம் வேலைக்கு செல்ல மனம் இடம் தரவில்லை. வெளியூரில் சென்று வேலை செய்யலாமா? (கமல், நெல்லை)
ப:- உங்கள் உடற்கூறு சார்ந்த தெய்வத்தை முதலில் தெரிந்து கொண்டு அத்தெய்வத்திற்குண்டான தானியத்தை பயிரிடுங்கள். அதற்குப் பின் எந்தப் பயிரையும் பயிரிடலாம். பிறகு பாருங்கள் பக்கத்து நிலத்தையும் நீங்க வாங்கிடுவீங்க.
கே:- எனது இஷ்ட தெய்வத்தை வணங்கி வந்த பின்னும், பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணங்கள் என்ன? (ரமா, தேனீ)
ப:- இஷ்ட தெய்வம் என்பது வேறு குலதெய்வம் என்பது வேறு. உடற்கூறு தெய்வம் என்பது வேறு, உடற்கூறு தெய்வம் எது என்பதை தெரிந்து வணங்க உங்கள் பிரச்சினைகள் தீரும்.
கே:- எனக்கு வயது 30. சிறு வயது முதல் கஷ்டத்திலேயே வாழ்ந்து வருகிறேன். இன்னும் திருமணம் ஆகவில்லை. இது எதனால்? (கவிதா, நாகை)
ப:- உங்கள் கால் பெருவிரல் அமைப்பு கீழ்புறம் விரிகோடு இருந்தால் உங்களின் 32-வது வயதில் திருமணம் நடக்கும். அதன் பின் உங்கள் கஷ்டம் தீரும்.
கே:- என் உடலில் ஆங்காங்கே வெண்மை படர்ந்து உள்ளது. வைத்தியம் பார்த்தும் பலனில்லை. எனக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விட்டது? (ரமா, ஓசூர்)
ப:- உங்கள் உடற்கூறு தெய்வம் எது என்பதை தங்களின் கால் பெருவிரல் ரேகை மூலம் தெரிந்து அதை பூஜித்து வாருங்கள். அத் தெய்வம் உங்கள் உடலினுள் வியாபித்து உங்கள் குறைகளை போக்கும்.
கே:- என் மகன் எப்போதும் சோம்பலாய் இருக்கிறான். படிப்பும் சரிவர வரவில்லை. எப்படி சரி செய்வது?(கனகா, மதுரை)
ப:- உங்களின் வீட்டினுள் லட்சுமி கடாட்சம் என்னும் ஒளி இல்லாமல் இருக்குமெனில் குழந்தைகள் சுறு சுறுப்பில்லாமல் இருப்பார்கள். லட்சுமியை உங்கள் வீட்டினுள் கொண்டு வாருங்கள். அதற்கான முயற்சியினை மேற்கொள்ளுங்கள். அறிவும், செல்வமும் சேர்ந்து வரும்.
கே:- கோவில் ஒன்று என் சொந்த செலவில் கட்டலாம் என எண்ணியுள்ளேன் செய்யலாமா? (பாலு, புளியம்பட்டி)
ப:- கால் பெருவிரல் கோமுகம் பெற்று வருணக்கோடும், வில்வக் கோடும், நாகக் கோடும் இருந்தால் கட்டலாம். உங்களின் உடற்கூறு தெய்வம் எது என கண்டு கொண்டபின் அத்தெய்வத்திற்கு கோவில் கட்டுங்கள்.
கே:- ரைஸ்மில் தொழில் தொடங்கலாம் என உள்ளேன் நன்றாக நடைபெறுமா? (சிவராஜ், வேலூர்)
ப:- உங்களுக்கு திருமணமாகி இருந்தால் உங்கள் மனைவியின் பெருவிரல் அமைப்பு கலசமுகம் பெற்று சிறிதாக சங்குகோடு இருக்கும் பட்சத்தில் உங்கள் கால் பெருவிரல் அமைப்பு கூர்ம முகம் பெற்றிருந்தால் உங்கள் மனைவியின் பெயரில் மில் ஆரம்பியுங்கள். அது ஜோராக நடக்கும்.
கே:- கால் பெருவிரல் ரேகையை வைத்து எப்படி ஜோதிடம் கூற முடியும்... (லதா, திருச்சி)
ப:- கைகளில் உள்ளது போலவே கால்களிலும் ரேகை உண்டு. அதிலும் குறிப்பாக கால் பெருவிரல் ரேகை தெளிவாக இருக்கும், கை ரேகையைக் காட்டிலும், கால் பெருவிரல் ரேகை மூலம் ஒரு மனிதனின் வாழ்க்கையை துல்லியமாக கணக்கிட முடியும்.
கே:- கால்பெருவிரலில் என்னென்ன ரேகை அமைப்புகள் உள்ளன? (சாந்தி, திருப்பூர்)
ப:- வில்வக்கோடுகள், வாகைக் கோடுகள், சக்கரக் கோடுகள் போன்ற இன்னும் நிறைய ரேகை அமைப்புகள் உள்ளன.
கே:- கால் பெருவிரலில் என்னென்ன முகங்கள் உள்ளன? (ராஜன், மதுரை)
ப:- ஒவ்வொரு மனிதனின் கால்பெருவிரல் அமைப்புகளும் வெவ்வேறு அமைப்புகளையுடையது. அதில் கோமுகம், கஜமுகம், குழிமுகம் என்ற அமைப்புகள் உண்டு. உதாரணமாக கால் பெருவிரல் அமைப்பு கஜமுகமாகவும், வாகைக் கோடுகளும் பெற்ற பரணி, மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள்.
கே:- எந்தெந்த தெய்வங்களை வணங்கினால் நற்பலன்கள் கிடைக்கும்? (கண்ணன், வள்ளியூர்)
ப:- ஒவ்வொருவரும் அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கி பலன்களை எதிர்பார்ப்பார்கள். அப்படி வணங்கினால் எவ்வித பலனும் கிடைக்காது. ஒவ்வொருவருக்கும் உடற்கூறு சார்ந்த தெய்வம் ஒன்று உண்டு இதனால் பெருவிரல் ரேகை மூலம் கண்டறிந்து பூஜிக்க நற்பலன்கள் கிடைக்கும்.
கே:- பிறந்த குழந்தைகளுக்கும் பலன் அறிய முடியுமா? (வீரா, ஈரோடு)
ப:- பிறந்த குழந்தைகளின் கால்பெருவிரல் ரேகையை எடுத்து அதன் மூலம் உடல் கூறு தெய்வத்தை கண்டறிந்து அதன்படி பெயர் சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.
கே:- தடைபட்டுக் கொண்டிருக்கும் திருமணம் நடைபெற இதில் வழி வகை உண்டா? (சுவர்ணலதா, பழனி)
ப:- திருமணம் தடைபடும் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரின் இஷ்ட தெய்வங்களை ரேகை மூலம் கண்டறிந்து அதில் பெரும்பாலானவர்களின் ரேகைகளில் பதிந்துள்ள தெய்வத்தை குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அந்த தெய்வத்தை வழிபட தடைபட்ட திருமணம் சிரமம் இல்லாமல் நடக்கும்.
gandhimathi- Posts : 900
Join date : 17/01/2013
Similar topics
» திருமணம் விரையில் நடக்க பரிகாரம்
» விரைவில் திருமணம் ஆக 10 டிப்ஸ்
» சீக்கிரம் திருமணம் நடக்க ஸ்லோகம்...
» சீக்கிரம் திருமணம் நடக்க ஸ்லோகம்...
» நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் – திருமணம் குறித்து தீபிகா
» விரைவில் திருமணம் ஆக 10 டிப்ஸ்
» சீக்கிரம் திருமணம் நடக்க ஸ்லோகம்...
» சீக்கிரம் திருமணம் நடக்க ஸ்லோகம்...
» நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் – திருமணம் குறித்து தீபிகா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum