நன்றி மறக்க மாட்டேன்… அஞ்சலியின் அரவான் வணக்கம்!
Page 1 of 1

வரவர தமிழ்சினிமா ஹாலிவுட் போலாச்சு! பட்ஜெட்டிலும் சரி, பிரசன்டேஷனிலும் சரி, பிரமிக்க வைக்கிறார்கள் நம் ஆட்கள். லேட்டஸ்ட் ஆச்சர்யம் அரவான்.
இரும்பை உருக்கி செய்த மாதிரி இருக்கிறார் ஆதி. இவரை பின்னிக் கொள்ளும் தன்ஷிகா தேக்குமர கட்டையாக தெரிகிறார். நெஞ்சை புடைத்துக் கொள்ளும் திமிரும், நெருப்பு கண்களுமாக அதிர வைக்கிறார் பசுபதி. ஒளிப்பதிவில் தொடங்கி, காஸ்ட்யூமில் கவர்ந்து, ஆர்ட் டைரக்ஷனில் அசர வைத்து நம்மை வினாடி நேரத்தில் ஈர்த்துக் கொள்கிறது அரவான் ட்ரெய்லர். பாடல் காட்சிகளின் ஒவ்வொரு வரியும் எத்தனை லட்சங்களை தின்று ஏப்பம் விட்டிருக்குமோ, வசந்தபாலனின் படங்கள் கண்ணுக்கு மட்டுமல்ல, கருத்துக்கும் தீனி போடுகிற ரகமல்லவா?
இதுவரை ஏராளமான பாடல்களை பாடி இசை ரசிகர்களின் நெஞ்சங்களில் தனி இடத்தை பிடித்திருக்கும் கார்த்திக், இப்படத்தின் இசையமைப்பாளராக பிரமோஷன் பெற்றிருக்கிறார். வழக்கமாக இசையமைப்பாளர்கள் அழைத்ததும் போய் ரெண்டு மணி நேரத்தில் பாடி கொடுத்திட்டு கைநிறைய சம்பளத்தை வாங்கி வந்துதான் எனக்கு பழக்கம். அந்த பாடல் ஹிட்டானால் மகிழ்வேன். இல்லையென்றால் அதுபற்றி அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டேன். ஆனால் திடீரென்று வசந்தபாலன் என்னை அழைத்து நீங்க மியூசிக் டைரக்டர் ஆகுறீங்களா என்று கேட்டபோது ஆர்வத்தில் சரி என்று சொல்லிவிட்டேன். அப்புறம்தான் தெரிந்தது. இது எவ்வளவு கஷ்டமான வேலை என்று. ஆனால் ஒருமுறை கூட எனக்கும் வசந்த பாலனுக்கும் நடுவே விவாதம் நடந்ததில்லை என்றார்.
பின்னாலேயே பேச வந்த வசந்தபாலன், ஆதிக்கும் பசுபதிக்கும் தினமும் ரத்த காயமில்லாமல் படப்பிடிப்பு முடிந்ததே இல்லை. படப்பிடிப்புக்கு வந்த முதல் நாளே ஆதியை மரத்தில் கட்டி வைத்துவிட்டேன். சட்டையில்லாத அவரது உடம்பில் எறும்புகளும் பூச்சிகளும் ஏறி கடித்து தள்ளின. அதையெல்லாம் பொறுத்துக் கொண்டார் அவர்.
ஒரு பாடல் காட்சியில் தன்ஷிகாவை விட ஆதி மிகவும் அழகாக இருக்கிறார். அவரது கட்டு மஸ்தான உடல்வாகும், நடிப்பும் அவரை இந்திய சினிமாவில் முக்கியமான இடத்திற்கு கொண்டு செல்லும். இந்த படத்தில் அவர் செய்திருப்பது எல்லாமே அவரது தகுதிக்கு ரொம்பவே குறைவு என்றுதான் சொல்வேன்.
நான் பிரச்சனைகளை தேடிப் போய் ரசிக்கிறவன். அங்காடி தெருவில் அப்படி ஒரு பிரச்சனை வந்ததும், வேறு மாதிரி ஒரு படம் எடுக்கலாமே என்று இந்த கதையை எடுத்திருக்கிறேன். 18 ம் நூற்றாண்டில் நடக்கிற கதை. அந்த வாழ்க்கையை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறேன். நீங்க பார்த்துட்டு சொல்லுங்க என்று முடித்துக் கொண்டார்.
வசந்தபாலன் சார்தான் எனக்கு தமிழ்சினிமாவில் ஒரு பிளாட்பார்ம் ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த நன்றியை என்றும் மறக்க மாட்டேன் என்றார் அஞ்சலி. அதற்காகவே இந்த படத்தில் ஒரு துளியூண்டு ரோல் பண்ணியிருக்கிறாராம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கருணாநிதியை நெருங்கவும் மாட்டேன், விலகி நிற்கவும் மாட்டேன்! – ரஜினி
» அஞ்சலியின் திமிரு
» அஞ்சலியின் ஆந்திரா பிளான்
» வசந்தபாலனுக்கு அஞ்சலியின் நன்றிக்கடன்!
» அஞ்சலியின் வீடு ராசி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum