தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் சினிமா செய்திகள் தினமும்

Go down

தமிழ் சினிமா செய்திகள் தினமும் Empty தமிழ் சினிமா செய்திகள் தினமும்

Post  meenu Sun Mar 24, 2013 12:12 pm

பெங்களூர்: திருமண வாழ்க்கைக்கு உடல் மற்றும் மன ரீதியாக லாயக்கில்லாதவராக இருக்கிறார் என்று கூறி பிரபல பாடகர் ராஜேஷ் கிருஷ்ணன் மீது குற்றம் சாட்டி விவாகரத்து கோரியுள்ளார் அவரது மனைவியும் பிரபல பாடகியுமான ரம்யா. தமிழில் வட்டாரம் உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடியவர் ராஜேஷ் கிருஷ்ணன். கன்னடத்தில் இவர் முன்னணி பாடகர். மூவாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி, நந்தி விருது கூட பெற்றுள்ளார். ஏற்கெனவே இருமுறை திருமணமாகி விவாகரத்தானவர். இவர் மூன்றாவதாக மணந்தவர்தான் பிரபல பாடகி ரம்யா. கடந்த 2011 நவம்பரில் கொல்லூர் முகாம்பிகை கோவிலில் திருமணம் நடந்தது. இவர்கள் திருமண வாழ்க்கையும் ஒரு வருடத்தில் முறிந்தது. கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்தனர்.

இந்த நிலையில் ரம்யா கோர்ட்டில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். ராஜேஷ் கிருஷ்ணன் திருமண வாழ்க்கைக்கு பொருத்தமில்லாதவர். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர் பலவீனமாக இருக்கிறார் என்று ரம்யா குற்றம் சாட்டி உள்ளார். ஜீவி பிரகாஷ் குழுவில் முக்கிய பாடகியாக உள்ளவர் இந்த ரம்யா என்பது குறிப்பிடத்தக்கது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum