தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சொதப்பும் அமலா; விட்டுபிடிக்கும் இயக்குநர்!

Go down

சொதப்பும் அமலா; விட்டுபிடிக்கும் இயக்குநர்! Empty சொதப்பும் அமலா; விட்டுபிடிக்கும் இயக்குநர்!

Post  ishwarya Thu Apr 11, 2013 5:41 pm

கட்டிப்புரண்டு அழுதாலும், கண்­ணீர் துளியாய் உருண்டாலும் நடிகைகளின் குணத்தை அறியவே முடியாது போலிருக்கிறது. ஒரே படத்தில் உசரத்தில் கொண்டு வைத்த தமிழ்சினிமாவை உதாசீனப்படுத்திவிட்டு தெலுங்கு படத்தில் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறாராம் அமலா பால். இதனால் ‘வேட்டை’ படத்திற்கு அவர் தர வேண்டிய கால்ஷீட் தள்ளி தள்ளிப் போகிறதாம். இந்த ‘அடக்கடவுளே’ சமாச்சாரத்தின் விரிவாக்கம் இதோ- டிசம்பர் 23ந் தேதி ‘வேட்டை’ ரிலீஸ் என்று அறிவித்துவிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான லிங்குசாமி.

ஆனால் படத்தின் நாயகன் ஆர்யா கொடுக்கிற ஒத்துழைப்பில் முக்கால்வாசிகூட கொடுக்கவில்லையாம் அமலா. கடைசி மூன்று நாட்கள் நடித்தால் இவரது போர்ஷனே முடிந்தது. ஆனால் லிங்குசாமியின் யூனிட்டே இவருக்காக காத்திருக்க, தெலுங்கில் ராம்சரண் தேஜாவுடன் நடிக்கப் போய்விடுகிறாராம் அவ்வப்போது. அதுமட்டுமல்ல, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற படங்களிலும் நடித்து வருகிறார் அவர்.

இந்த படங்களுக்கும் தேதி ஒதுக்க வேண்டிய கட்டாயம். இருந்தாலும் நடிகைகளின் மனசு கண்ணாடி பாத்திரமல்லவா கவனமாக கையாள்கிறார் லிங்கு. அவர் வரும்போது வரட்டும். மற்ற போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை பார்ப்போம் என்று பிசியாக இருக்கிறாராம். அமலா போனால் ஒரு விமலா வருவார். விமலா போனதும் கமலா வருவார். இதுதானே இண்டஸ்ட்ரி தத்துவம்.

சாரோட சாமர்த்தியமே கண்ணாடியக்கூட கனிவா கையாளும் பண்புதான்!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum