தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் நெருங்கிய தோழி நயன்தாரா; இண்டர்நெட்டில் எனக்கு 2 லட்சம் ரசிகர்கள் – ஜெனிலியா

Go down

என் நெருங்கிய தோழி நயன்தாரா; இண்டர்நெட்டில் எனக்கு 2 லட்சம் ரசிகர்கள் – ஜெனிலியா Empty என் நெருங்கிய தோழி நயன்தாரா; இண்டர்நெட்டில் எனக்கு 2 லட்சம் ரசிகர்கள் – ஜெனிலியா

Post  ishwarya Thu Apr 11, 2013 5:14 pm

விஜய்யுடன் நடித்த “வேலாயுதம்” படத்தை ரொம்ப எதிர்பார்க்கிறார் ஜெனிலியா. இப்படம் தீபாவளிக்கு வருகிறது. ஜெனிலியா அளித்த பேட்டி வருமாறு:-நிறைய பேர் “பப்” பார்ட்டிகளுக்கு போகிறார்கள். எனக்கும் அங்கு போக பிடிக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன். இவற்றில் கலந்து கொண்டாலும் கூட எல்லை மீறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அந்த கட்டுப்பாடு என்னை பாதுகாக்கிறது.

சினிமாவில் நிறைய சினேகிதிகள் உள்ளனர். ஆனால் எனக்கு நெருங்கிய தோழியாக இருப்பவர் நயன்தாரா. சொந்த விஷயங்களை இருவரும் பேசிக்கொள்வோம். ரகசிய விஷயங்களையும் பகிர்ந்து கொள்வோம். திரையுலகத்தில் உள்ள எல்லா விஷயங்களை பற்றியும் பேசுவோம். என்னிடம் எனக்கு பிடித்தது சிரிப்பு. எனது சிரிப்பு நன்றாக இருப்பதாக நிறைய பேர் பாராட்டுகின்றனர். என் தலைமுடியும் பிடிக்கும். என் அழகுக்கு காரணமே இந்த இரண்டும்தான்.

ஜீன்ஸ், டீ சர்ட் அணிவ தும் பிடிக்கும். பொது விழாக் களில் புடவை உடுத்திக் கொண்டு செல்கிறேன். நாய்க்குட்டியும் பிடிக்கும். வீட்டில் நாய்க்குட்டி வளர்க்கிறேன். நான் கிறிஸ்தவ பெண். ஞாயிற்றுக்கிழமைதோறும் தவறாமல் சர்ச்சுக்கு போகிறேன். அங்கு மன அமைதி கிடைக்கிறது. இண்டர்நெட் டுவிட்டரில் எனக்கு 2 லட்சம் ரசிகர்கள் உள்ளனர். பிருதிவிராஜூம் டுவிட்டரில் எனக்கு நண்பராக இருக்கிறார். இவ்வாறு ஜெனிலியா கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum