தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஃபுல்லா முடிஞ்சுது ஆராய்ச்சி – சென்னைக்கு திரும்பிய ஜெய்

Go down

ஃபுல்லா முடிஞ்சுது ஆராய்ச்சி – சென்னைக்கு திரும்பிய ஜெய் Empty ஃபுல்லா முடிஞ்சுது ஆராய்ச்சி – சென்னைக்கு திரும்பிய ஜெய்

Post  ishwarya Thu Apr 11, 2013 5:09 pm

‘எங்கேயும் எப்போதும்’ வெற்றிக்கு பின் சென்னையில் இருந்து அதை அறுவடை செய்ய வேண்டிய ஜெய், தனது ‘அட்டகாச’ ஃபிரண்ட்சுகளுடன் மலேசியாவுக்கு சென்றிருந்தார். இந்த அட்டகாச பிரண்ட்ஷிப் வட்டாரத்தில் பிரேம்ஜியும் அடக்கம். தியேட்டரில் ஒரு வார ஓட்டத்தை காட்டினாலே அவரை மொய்த்துக் கொள்ளும் இயக்குனர்கள் வட்டாரம் ஜெய்யை தேடி போன் மேல் போன் அடிக்க, ’7 ஆம் அறிவு படத்தின் கதை என்னன்னு ஆராய்ச்சி பண்ணுறதுக்காக நான் பிரேம்ஜியெல்லாம் மலேசியாவுக்கு வந்திருக்கோம். தினம் ஆஃப் வரைக்கும்தான் ஆராய்ச்சி போவுது. ஃபுல்லா முடிஞ்சதும் வந்துர்றோம்’ என்று பதிலளித்துக் கொண்டிருந்தார் அவர். நல்ல வேளையாக ஆராய்ச்சியை அதற்குள் முடித்துக் கொண்டு சென்னை திரும்பிவிட்டாராம்.

அடுத்து உதயநிதி தயாரிக்கும் படத்தை சீனு ராமசாமி இயக்கப் போகிறார். தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு இந்த படத்தை இயக்கப் போகிறார் அவர். உதயநிதி படங்கள் என்றாலே அது 25 கோடியையாவது முழுங்குமேப்பா… என்பதுதான் கோடம்பாக்க வரலாறு. அதை முறியடிப்பதற்காக குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கப் போகிறாராம். அதில் ஒன்றைதான் சீனு ராமசாமி இயக்குகிறார்.

ஜெய்யும் இவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். ரிசல்ட் என்ன என்பதை அறிந்து கொள்ள இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். சீனு மனசுல ஜெய் இருக்கார். ஜெய் மனசுல சீனு இருக்காரான்னு தெரியணுமே!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum