பொன்னான வாழ்வருளும் பூந்தோட்டம் குருபகவான்
Page 1 of 1

கருத்துகள்
What are Dietary Supplements
You need to upgrade your Adobe Flash Player to watch this video.
Get Adobe Flash player
MORE VIDEOSநவகிரகங்களில்
குருபகவான் தனுசு, மீன ராசிகளுக்குரியவர். சுப கிரகமாக விளங்கும் இவர்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் நாயகர்
ஆவார். ஒரு ஜாதகர் மேன்மையுற அவரது ஜாதகத்தில் குருபகவான் சிறப்பாக இருக்க
வேண்டும். அவரது அருட்பார்வை பெற்றால்தான் ஜாதகரின் கிரகதோஷங்கள்
தீரும்.‘குரு பார்த்தால் கோடி நன்மை’ என்பது பழமொழி. பெண்களுக்குத்
திருமணமாக குருபலம் மிகவும் அவசியம். குரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு
ராசிக்குச் செல்ல ஒரு வருடமாகிறது. அதுவே குரு பெயர்ச்சி நாளாகும்.
தமிழகத்தில்
குருபகவான் பூஜித்து பேறு பெற்ற தலங்கள் நிறைய இருந்தாலும் திருஇரும்பூளை
எனப்படும் ஆலங்குடி, தஞ்சைக்கு அருகேயுள்ள இருப்புப் பாதையில் உள்ள
தென்குடித்திட்டை, காரைக்குடிக்கு அருகிலுள்ள பட்டமங்கலம் போன்ற
திருத்தலங்கள் குரு பரிகாரத் திருத்தலங்களாக பிரபலமடைந்துள்ளன.
குருப்பெயர்ச்சி நாளில் இத்தலங்களில் ஏராளமான பக்தர்கள் குழுமி சிறப்பு
வழிபாடுகள் செய்கின்றனர். குருவிற்கு உகந்த நாள் வியாழக்கிழமையாகும். இந்த
வரிசையில் ராசிகளின் உருவங்கள் தான் அமர்ந்திருக்கும் பாறையில்
பொறிக்கப்பட்டு, ராசிமண்டல குருபகவான் என்ற திருப்பெயருடன் காட்சி தரும்
குருபகவானை தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் என்ற ஊரில் அமைந்திருக்கும் பழமையான
சிவாலயத்தில் கண்குளிரதரிசிக்கலாம்.
பூந்தோட்டத்திலிருந்து
நன்னிலம் செல்லும் பிரதான சாலையிலேயே பழமையும் பெருமையும் கொண்ட இந்த ஆலயம்
அமைந்துள்ளது. ஆலய நாயகனாக அகஸ்தீஸ்வரரும் நாயகியாக தர்மசம்வர்த்தினியும்
அருள்கின்றனர். ஈசன் கிழக்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். அருகிலேயே
இறைவி தெற்கு திசை நோக்கி காட்சி தருகிறாள். பொதுவாக வெளிப்புற கோஷ்டத்தில்
தட்சிணாமூர்த்தி வலது பாதத்தை முயலகன் மீது வைத்து இடதுகாலை மடக்கி வலது
தொடையின் மீது வைத்தும் வலக்கை சின்முத்திரை காட்ட, இடக்கையில் ஏடுகளை
ஏந்தியும் காட்சியளிப்பார். ஆனால், இத்திருத்தலத்திலோ ராசிகள் அனைத்தும்
பொறிக்கப்பட்ட ஒரு சிறிய பாறையின் மீது அமர்ந்துள்ள நந்தியின் மீது
உட்கார்ந்தபடி சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை வாரி வழங்கும் மோன நிலையில்
இந்த ராசி மண்டல குரு பகவான் கம்பீரமாகக் காட்சி தந்து பக்தர்களுக்கு
அருள்பாலிக்கிறார்.
இத்தலத்தில் ராசிமண்டல குன்றின் மீது
நந்திபகவானின் மீது எழுந்தருளியுள்ள குரு பகவான் நான்கு கரங்களுடன்
திகழ்கிறார். பின்னிரு கரங்களில் சர்ப்பம், அக்னி ஏந்தி, வலக்கை
சின்முத்திரை காட்ட, இடக்கையில் ஏடுகளுடன் அருட்கோலம் கொண்டுள்ளார்.
இவ்வாறு ராசிமண்டலத்துடன் நந்தியுடன் வேறு எந்த தலத்திலுமே குருபகவான்
இல்லை என்றே கூறலாம்.
சனிபகவானுக்கு அடுத்தபடியாக, கிரகநாதர்களில்
மக்கள் மிகவும் பயபக்தியுடன் வழிபடுவது, குரு பகவானைத்தான்.
வியாழக்கிழமைகளிலும் ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி நாளன்றும் இவரது
சந்நதியில் சிறப்பு வழிபாடுகள், பரிகார பூஜைகள் நடைபெறுகின்றன. அப்போது
சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து
வழிபடுகின்றனர். வரும் 17.5.2012 அன்று குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த
ஆலயத்தில் திருமணத்தடை நீங்க, மகப்பேறு கிட்ட, பெருஞ்செல்வம், புகழ் அடைய
என பல்வேறு பிரார்த்தனைகளுடன் ஈசனையும் ராசிமண்டல குருபகவானையும் பக்தர்கள்
வழிபட்டுச் செல்கின்றனர். மேலும் இங்கு எழுந்தருளியிருக்கும் ராசிமண்டல
குருபகவானை பிரதோஷ காலத்தில் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை செய்து வழிபட
அனைத்து வித நன்மைகளும் கிட்டுவதால், பிரதோஷ வேளைகளில் இவருக்கும் இவர்
எழுந்தருளியுள்ள நந்தியம்பெருமானுக்கும் விசேஷ வழிபாடுகள் செய்கின்றனர்.
சுமார்
500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படும் இத்தலத்து அறம்வளர்த்த நாயகி
சமேத அகஸ்தீஸ்வரரை, அகத்தியர் தனது மனைவி லோபாமுத்திரையுடன் வந்து
வழிபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் ராஜகோபுரம் காணப்படவில்லை.
முன்புற வாயில் மட்டுமே உள்ளது. ஆனால் ஆலயத்திற்குள் தொன்மை வாய்ந்த
சந்நதிகள் உள்ளன. அகத்தியர் வழிபட்ட தலங்கள் அகஸ்தீஸ்வரங்கள் என
அழைக்கப்படுகின்றன. இத்தலம் அத்தகைய ஒன்றாக இருந்தாலும் இப்பகுதியில் இந்த
ஆலயம் ராசிமண்டல குருபகவான் ஆலயம் என்றே பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டம், பூந்தோட்டம்&நன்னிலம் பாதையில் அமைந்திருக்கிறது, இக்கோயில்.
& விஜயலட்சுமி சுப்ரமணியம்
கருத்துகள்
16:39:41
Monday
2012-06-04

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» பொன்னான வாழ்வருளும் பூந்தோட்டம் குருபகவான்
» புடவை பூந்தோட்டம்
» வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்
» குருபகவான் பயோடேட்டா
» ஆபத்துகளிலிருந்து காக்கும் ஆலங்குடி குருபகவான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum