புடவை பூந்தோட்டம்
Page 1 of 1
புடவை பூந்தோட்டம்
புடவைத் திருவிழாவாகவே நடந்தது சென்னை எழும்பூர் கோ ஆப்டெக்ஸ் கண்காட்சி. நம்ம ஊர் பட்டுப் புடவைகளோடு, பிற மாநிலங்களின் லேட்டஸ்ட் மற்றும் பாரம்பரிய ரகங்கள் என வண்ணங்களின் அணிவகுப்பு. மடித்து வைத்திருப்பதைப் பார்ப்பதைவிட கட்டிப் பார்த்தால்தானே அழகு? இதோ நடிகை அம்முவின் சேலை அணிவகுப்பு!
மேற்கு வங்கம்
டஸர் சில்க் நூலில் தயாரிக்கப்பட்ட நவீன காட்டன். இரு பக்கமும் எம்பிராய்டரி செய்யப்பட்ட கலர்ஃபுல் பார்டர். புடவை கலரைவிட பார்டர் கலர்தான் பிளவுஸுக்குப் பொருத்தம். சிம்பிளான நகைகள் சரியான சாய்ஸ். தரமான காட்டன் என்பதால் சம்மருக்கு இதம். விலை ரூ.3,570 முதல்.
உத்தரப்பிரதேசம்
பாட்டிக் பிரின்டிங் புடவை இம்மாநில ஸ்பெஷல். அதிலும் கஞ்சன் சில்க் பாரம்பரிய ரகம். கட்டிக்கொண்டு சென்றால் ஃபங்ஷன்களில் ஒளிவட்டம் நம் மீதுதான். உடலை உறுத்தாத ஸாப்ஃட்னெஸ். ஃப்ரீயாகத் தலைமுடியை அவிழ்த்துவிட்டால் கூடுதல் அழகு. எளிய நகைகளே எழிலைக் கூட்டும். விலை ரூ.960 முதல்.
குஜராத்
பாந்தினி ரகத்துக்குப் பேர் போனது குஜராத். இதன் சிறப்பே எம்பிராய்டரியும் வெல்வெட் வேலைப்பாடும்தான். மாநிறம், சிவப்பு, கருப்பு என எந்நிறத்துக்கும் பொருந்தும். கல் வைத்த நகைகள் கனகச்சிதம். பார்ட்டிகளுக்கு உடுத்த உகந்தது. விலை ரூ.1,920 முதல்.
பீகார்
ஸ்பன் சில்க் மெட்டீரியல். கலக்கும் கலர் காம்பினேஷன்கள். விழாக்களுக்கேற்ற வித்தியாசமான சில்க் புடவை. தங்க நகைகளைவிட ஆர்ட்டிபீசியல் நகை செட் பெஸ்ட் சாய்ஸ். மாடர்ன், டிரெடிஷனல் இரு தரப்புக்கும் பிடிக்கும். விலை ரூ. 3,000 முதல்.
ராஜஸ்தான்
கல்லூரிப் பெண்களுக்கான பிரத்யேக ரகம். கட்டினால் உடல் ‘சிக்’கெனத் தெரியும். வழவழப்பான டிசைனர் புடவை உடுத்திக்கொண்டாலே உற்சாகம்! பார்டரில் வேலைப்பாடு, கலர்ஃபுல் டிசைன் எனப் பார்க்கப் பார்க்க அட்ராக்ஷன். டிசைனர் வொர்க் செய்யப்பட்ட பிளவுஸ், ஸ்டோன்வொர்க் நகைகள் அணிந்தால் அட்டகாசம்... பார்த்த விழி பார்த்தபடி! விலை ரூ. 1,200 முதல்.
தமிழ்நாடு
பட்டுக்குப் பேர்போன காஞ்சிபுரத்தின் கண்டுபிடிப்பு. பட்டுடன் சணலும்(ஜூட்) சேர்த்து நெய்யப்பட்ட உயர்தரம். அழகான பார்டர் டிசைன்கள். தலைப்பில் தோகை விரித்தாடும் மயில், கிருஷ்ணர் என கண்கவரும் உருவங்கள். டிரெடிஷனல் பெண்களுக்கு விருப்பமான விருந்து. கிராண்ட் லுக் தரும் நகைகள் சூப்பராக சூட் ஆகும். விசேஷங்களுக்கு உடுத்த வித்தியாசமான சாய்ஸ். எல்லா வயதினருக்கும் ஏற்ற ரகம். விலை ரூ. 2,310 முதல்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புடவை!!
» பட்டுப் புடவை
» தகவல் பூந்தோட்டம்
» பொன்னான வாழ்வருளும் பூந்தோட்டம் குருபகவான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum