தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஷாருக் போதைக்கு ரஜினி ஊறுகாய்…!

Go down

ஷாருக் போதைக்கு ரஜினி ஊறுகாய்…! Empty ஷாருக் போதைக்கு ரஜினி ஊறுகாய்…!

Post  ishwarya Thu Apr 11, 2013 4:46 pm

ரா ஒன் – இன்னும் ஓரிரு மாதங்களுக்கு இதுதான் டாபிக். எந்திரன் வெளிவந்தபோது தமிழகத்தில் இருந்த பரபரப்பு, எதிர்பார்ப்பு எல்லாம் இப்போது அதைவிட இரண்டு மடங்கு மும்பையில். அந்த மும்பை பரபரப்பு தமிழகத்திலும் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதற்கு காரணம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த நிமிடம்வரை ரா – ஒன் படத்திற்காக கிட்டத்தட்ட 160 கோடி செலவு செய்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக செலவில் உருவான படம். போட்ட பணம் திரும்ப வருமா…? இந்திய அளவில் விநியோக உரிமை மட்டும் 77கோடிக்கு விற்பனை ஆகியிருக்கிறது, வெளிநாட்டு உரிமை 45 கோடி, தொலைகாட்சி உரிமை 40, பாடல்கள் 15 என்று இதுவரைக்கும் போட்ட கணக்கே லாபம் தந்துவிட்டது. இதில் படம் வேறு தமிழ், தெலுங்கு மற்றும் ஜெர்மன் மொழிகளில் டப்பாக இருக்கிறது. தமிழ் டப்பிங் உரிமையை அபிராமி ராமநாதன் ஒரு பெரிய தொகைக்கு வாங்கியிருக்கிறார்.

ரா ஒன் அறிவிக்கப்பட்டதுமே சிலர் ஐயகோ எந்திரனின் காப்பி என்று புலம்பித்தள்ளினார்கள் எந்திரனே காப்பி என்பதை மறந்துவிட்டு. ஆனால் ரா ஒன்னின் இயக்குனர் ஆறு வருடங்களுக்கு முன்பு தான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும்போது இந்த கதை மனதில் தோன்றியதாக டக்கால்ட்டி விடுகிறார். (ஒருவேளை சக்திமான் பார்த்திருப்பாரோ…???) ஷாருக்கான் தென்னிந்தியராக நடிப்பதாக சில தரவுகள் தெரிவிக்கின்றன. படத்தில் ஷாருக்கின் கேரக்டர் பெயர் ஜி ஒன். அப்படின்னா ரா ஒன்…? அது அர்ஜுன் ராம்பாலின் கேரக்டர் பெயர். அதை ஏன் படத்தின் டைட்டிலாக வைத்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. ஷாருக் கேரக்டரை விட அர்ஜுன் ராம்பாலுக்கு முக்கியமான கேரக்டர் அதனால்தான் அவருடைய கெட்டப்பை கூட ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்கிறது ஒரு தரப்பு.

சரி மேட்டருக்கு வருவோம். சமீப வருடங்களாக பாலிவுட் ஹீரோக்கள் தங்கள் படங்களை பிரமோட் பண்ணுவதற்காக ரொம்பவும் மெனக்கெடுகிறார்கள். அதிலும் ஷாருக் மற்றும் அமீர் கான் செய்யும் வித்தைகள் உச்சக்கட்டம். இரண்டு கான்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் படங்களை மார்கெட்டிங் செய்கிறார்கள். ஷாருக்கை பொருத்தமட்டில் அவருடைய படங்களுக்கு மிகப்பெரிய விளம்பரத்தை தேடித் தருவது கிரிக்கெட். அடி மேல் அடி வாங்கினாலும் ஷாருக் ஐபிஎல்லை விடாப்பிடியாக பிடித்திருப்பது இதற்குத்தான். தவிர இந்தமுறை உலகக்கோப்பை கிரிக்கெட் நடந்துக்கொண்டிருக்கும் வேளையில் ரா – ஒன் ட்ரைலரை வெளியிட்டதில் எக்கச்சக்க பப்ளிசிட்டி.

இதுதவிர்த்து என்னென்ன மார்கெட்டிங் வித்தைகள்…? இந்தமுறை புதிய டெக்னிக் அதாவது ரா – ஒன் பெயரில் ப்ளே ஸ்டேஷன் கேம் வெளியிட்டு சோனி நிறுவனமும், ரா – ஒன் படமும் விளம்பரம் தேடிக்கொண்டது. நோக்கியா, கூகுள், யூடியூப் என்று பெரிய நிறுவனங்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் படத்திற்கு ஸ்பான்சர் செய்கின்றன.

இன்னும் என்ன செய்யலாம் என்று யோசித்தவர்களுக்கு சில பிரபல நடிகர்களை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்கலாமே என்று தோன்றியிருக்கிறது. சஞ்சய் தத், பிரியங்கா சோப்ரா என்று சில பாலிவுட் முன்னாள்களை வளைத்துபோட்டதோடு, அமிதாப்பை படத்தின் ஒரு முக்கியமான காட்சிக்கு வாய்ஸ் ஓவர் கொடுக்க வைத்திருக்கிறார்கள்.

ரைட்டு அடுத்து…? உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவில் கல்லா கட்ட, படத்தில் ஜாக்கி சானை நடிக்க வைக்க முயன்றிருக்கிறார்கள். ஜாக்கி அதுக்கெல்லாம் அசருகிற ஆளா…? கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக எஸ்கேப்பாகிவிட்டார். அடுத்த டார்கெட்…? நம்ம சூப்பர்ஸ்டார். ரஜினியை படத்தின் ஒரு காட்சியிலாவது நடிக்க வைத்துவிட்டால் தமிழகம், ஏன் தென்னிந்தியா முழுவதும் படம் பெரிய கலெக்ஷன் பார்த்துவிடும். உடல்நிலைகோளாறில் இருந்த ரஜினியை அப்படி இப்படியென்று மகள் சவுந்தர்யாவை வைத்து பேசி நடிக்க (???) வைத்திருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் ரஜினி ரா ஒன்னில் நடித்தாரா…? படத்தின் ஒருகாட்சியில் ரஜினி, எந்திரன் சிட்டி கெட்டப்பில் தோன்ற வேண்டும். ஆனால் அதற்கு ரஜினிதான் நடிக்க வேண்டும் என்றில்லை. கிராபிக்ஸ் கூட செய்துக்கொள்ளலாம். (எந்திரனில் செய்தது போலவே) அதேசமயம் ரஜினி நடித்தார் என்றும் ஊர் உலகத்தை நம்ப வைக்க வேண்டுமே. எனவே, நீங்க வந்தா மட்டும் போதும், நீங்க வந்தா மட்டும் போதும் என்ற ரீதியில் ரஜினிக்கு அப் அண்ட் டவுன் மும்பைக்கு டிக்கெட் போட்டு உபசரித்திருக்கிறார்கள்.

ரஜினி ரா ஒன்னில் நடித்தாரோ இல்லையோ, ஆனால் இது Tribute to Rajnikanth என்று பிதற்றுகிறது ஒரு ஆங்கிலப் பத்திரிகை. உண்மையிலேயே இது ரஜினிக்கு ஒரு கெளரவமா….? தன்னுடைய படத்தின் விளம்பரத்திற்காக ரஜினியை பயன்படுத்தியிருக்கிறார் ஷாருக். சுருக்கமாகச் சொன்னால் ஷாருக் போதைக்கு ரஜினி ஊறுகாய். இது தெரியாமல் ஏதோ ரஜினியை பெருமைப்படுத்திவிட்டதாக மீடியாவோடு சேர்ந்து ரஜினி ரசிகர்களும் கூப்பாடு போடுவது வேடிக்கையாக இருக்கிறது.

சரி, வரும் ஆனா வராது வடிவேலு காமெடி பாணியில் எத்தனையோ முறை ரஜினி அவரது ரசிகர்களை வைத்து காமெடி செய்திருக்கிறார். நான் வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்னு சொல்லிட்டு கடைசிவரைக்கும் வராமல் ரசிகர்களுக்கு பெப்பே காட்டியிருக்கிறார். டூயட் பாடல்களில் “கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு… காலத்தின் கையில் அது இருக்கு…” போன்ற வரிகளை வைத்து தமிழனை தலை சொறிய வைத்திருக்கிறார். இப்படியெல்லாம் கோடானு கோடி ரசிகர்களை அவருடைய போதைக்கு ஊறுகாயாக்கிய ரஜினி ஒரே ஒருமுறை யாருடைய போதைக்கோ ஊறுகாயாக்கப் பட்டால் ஒன்னும் குத்தமில்லை.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum