தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரஜினியை நாளை சந்திக்கிறார் ஷாருக் கான்

Go down

ரஜினியை நாளை சந்திக்கிறார் ஷாருக் கான் Empty ரஜினியை நாளை சந்திக்கிறார் ஷாருக் கான்

Post  ishwarya Sat Mar 23, 2013 5:12 pm



சென்னை, அக்.7: பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நடிகர் ரஜினிகாந்தை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கிறார்.

ஷாருக்கான் நடிக்கும் "ரா ஒன்' ஹிந்திப் படத்தின் சில முக்கிய காட்சிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.2) ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் நடித்தார். இதையடுத்து ரஜினியை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காக சென்னை வருகிறார் ஷாருக்கான்.

இது குறித்து அவர் கூறியதாவது:

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியைக் காண சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை வருகிறேன். அன்று ரஜினிகாந்த் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்திக்கவுள்ளேன். "ரா ஒன்' படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளை ஏற்று மும்பைக்கு வந்து நடித்துக் கொடுத்தார் ரஜினி.

அவரை மும்பைக்கு அழைத்து வந்தது முதல் படத்தின் எடிட்டிங்கிலும் உடனிருந்து ரஜினியிடம் ஒப்புதல் பெற்றுத் தரும்வரை அவரது மகள் செளந்தர்யா உதவி செய்தார். ரஜினியின் அன்பு என்னை நெகிழ வைத்துவிட்டது. அதனால் அவரை நேரில் சந்தித்து நன்றி கூறவுள்ளேன்.

நான் சிறு வயதிலிருந்தே கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரின் தீவிர ரசிகன். இவர்கள் இருவரைப் பற்றிய பல தகவல்களை என் அம்மா என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார். கமலுடன் "ஹே ராம்' படத்தில் நடித்துவிட்டேன். இப்போது ரஜினியுடனும் "ரா ஒன்'னில் நடித்துவிட்டேன்.

இந்தியாவின் இரண்டு மாபெரும் நடிகர்களுடன் இணைந்து நடித்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன் என்றார் ஷாருக்கான்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ராம்தேவ் உண்ணாவிரதம்: ஷாருக் கான் கண்டனம்
» தமிழ்ப் படங்கள் உலகத் தரம் வாய்ந்தவை: ஷாருக் கான்
» ரஜினி- கமல் இருவரும் மிகப் பெரிய ஜாம்பவான்கள் – ஷாருக் கான்
» இந்த சல்மான், ஷாருக் கான் சண்டை ஓயாது போல: இப்ப என்னாச்சு தெரியுமா?
» கட்சியைப் பதிவு செய்வதற்காக நாளை தேர்தல் ஆணையாளரைச் சந்திக்கிறார் பொன்சேக்கா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum