உயிரின் எடை 21 கிராம் – திரை விமர்சனம்
Page 1 of 1
உயிரின் எடை 21 கிராம் – திரை விமர்சனம்
எந்த யூகத்திற்கும் அடங்காத தலைப்பு. அமானுஷ்ய கதையாக இருக்குமோ என்ற பீதியோடு உள்ளே போனால், ’ஒருவன் இறந்தபின் அவனது எடையிலிருந்து 21 கிராம் குறைகிறது’ என்றொரு ஆராய்ச்சி தகவலுடன் படத்தை ஓட்ட தொடங்குகிறார்கள்.
உயிரின் எடை வேண்டுமானால் 21 கிராமாக இருக்கலாம். ஆனால் படத்தில் வெட்டப்படும் ரவுடிகளும் அவர்கள் போக்கிக் கொள்கிற உயிர்களின் எடையையும் சேர்த்தால் அதுவே 21,000 கிராம் எடையை தாண்டும் போலிருக்கிறது. அத்தனை சதக் சதக்… அத்தனை குபுக் குபுக்…
அந்த ஊர் ரவுடிகள் எல்லாம் அச்சா என்கிறார்கள் திலகனை. நாற்காலியை விட்டு கூட எழுந்திருக்கலாமல் ஸ்கெட்ச் போடுகிறார் அந்த வயசான அச்சா. செல்போனை எடுத்து அசால்ட்டாக எதிர்முனையிலிருக்கும் ஏகனிடம் (இவர்தான் ஹீரோ) அவனை முடிச்சுரு என்கிறார். அரையிருட்டில் சம்பந்தப்பட்ட நபரை சாய்த்துவிட்டு அச்சா… ஆச்சு என்று அவரது காலடியில் அமர்ந்து கொள்கிறார் ஹீரோ. இதே மாதிரி காட்சிகள் அடுத்தடுத்து தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. எல்லாம் கொலைகள். அந்த ஊர் போலீசே அச்சாவுக்கு முன் உச்சா போகும்போது சட்டமாவது ஒழுங்காவது?
முதல் பாதி கொடூரங்களை சகித்துக் கொண்டால், இரண்டாம் பாதி இன்பத்தை அனுபவிக்கலாம். அப்படியே நேர் எதிராக இன்னொரு களத்தை காட்டுகிறார்கள். நச் நச் என்று உயிர்களை காவு வாங்கும் அந்த ஹீரோ ஏகனை அச்சாவின் மகனே போட்டுத்தள்ள குற்றுயிரும் குலையுயிருமாக ஒரு மலைவாழ் கிராமத்தில் ஒதுங்குகிறார். அங்கே தெரிகிறது அவருக்கு உயிரின் மதிப்பு. ஒரு சொட்டு கண்ணீருக்கு கூட இத்தனை வலிமையா என்று திகைக்கிறார். வாழ நினைக்கிறது மனசு. வாழ விட்டதா விதி? இதுதான் மீதி படம்.
அச்சாவாக நடித்திருக்கிறார் மலையாள நடிகர் திலகன். இவரெல்லாம் அந்த ஊர் சிவாஜி என்பதால் விமர்சிக்க நமக்கு அருகதையே இல்லை. தனது மகனையும் விட்டுக் கொடுக்க முடியாமல், தனது சொல்லை வேதமாகவே கேட்டு ’வெட்டுத்தொழில்’ பார்த்த தனது கையாளையும் விட்டுக் கொடுக்க முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு அருமை.
படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், ஹீரோ எல்லாமே இந்த ஏகன்தான். பணம் போட்டவரும் இவர்தான் என்பதால் மொதத படத்தையும் தனது தோள் மீது சுமக்கப் பிரியப்பட்டிருக்கிறார். ஒற்றை ஆளாக இவர் வெட்டிப்போடுவது ஒரு கட்டத்தில் அலுப்பையே ஏற்படுத்துகிறது. மலைகிராமத்தில் இவருக்கும் விதவை வினிதாவுக்கும் நடுவே எழும் அந்த காதல் எல்லை மீறாமல் அப்படியே ஓரிடத்தில் நிறுத்தப்படுவது நல்ல கதைக்கான நாகரீகம். சுட்டிக்குழந்தை சங்கமித்ராவின் நடிப்பையும் ரசிக்கலாம்.
அண்ணனை பறிகொடுத்த தம்பி, தனது அண்ணியால் கொலைக்கு துண்டப்படுவது பயங்கரம். அதுவே கிராமத்தின் யதார்த்தமும் கூட. படத்தில் இவர்கள் அரிவாள் துக்குகிற அதே அளவுக்கு சென்சாரிலும் கத்தரி துக்கியிருக்கிறார்கள். பல காட்சிகளில் வசனங்கள் சைலன்ட் ஆக்கப்பட்டிருக்கின்றன. சிலவற்றை புரிந்து கொள்ளவும் முடிவதால் சொரேர்…
திரைப்பட கல்லுரி மாணவர்களின் இந்த முயற்சி, அக்கல்லுரிக்கு பெருமை சேர்க்கவில்லை என்றாலும் சிறுமை சேர்க்கவில்லை. அந்த வகையில் நிம்மதி…
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘உயிரின் எடை 21 கிராம்’ படத்தின் கதை என்ன?
» டூ – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» கலகலப்பு – திரை விமர்சனம்
» டூ – திரை விமர்சனம்
» கோ – திரை விமர்சனம்
» ரா-1 – திரை விமர்சனம்
» கலகலப்பு – திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum