நயன்தாரா பிரபுதேவா மோதலின் பின்னணி?
Page 1 of 1
நயன்தாரா பிரபுதேவா மோதலின் பின்னணி?
நயன்தாரா & பிரபு தேவாவுக்கு இடையில் மீண்டும் மோதல்’ என்ற சூடான கிசுகிசு தமிழ் மீடியாவில் வட்டமடித்தபடி இருக்கிறது. உண்மையில் நடந்தது என்ன என்பதை ஒரு நோண்டல் விட்டோம்.
பின்னணியில் நடந்ததாகச் சொல்லப்படும் விஷயங்கள் இதோ…
நயன்தாரா தற்போது நடித்து முடித்திருக்கும் ‘ஸ்ரீ ராம ராஜ்ஜியம்’ தெலுங்குப் படத்தின் ஷூட்டிங் சில வாரங்களுக்கு முன்பு முடிந்தது. அப்படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்ட நாட்களுக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே முடிய, பிரபுதேவாவுடன் சேர்ந்திருக்கலாமென்று நயன்தாரா விரும்பினார். உடனே அவர் ஒரு படத்தின் கதை விவாதத்திற்காக வெளிநாட்டுக்குச் சென்றிருந்த பிரபு தேவாவிற்கு போன் பண்ணி, ‘நான் உடனே கிளம்புகிறேன். அங்கே வந்து உங்களோடு இருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறாராம். ‘நீ வரவேண்டாம். நான் உடனே கிளம்பி வந்துவிடுகிறேன்’ என்று பிரபுதேவா கூறிவிட்டாராம். தன் மீது பாசத்தைக் கொட்டும் குழந்தைகளுடன் ரகசியமாக வெகேஷனுக்கு வந்தது நயன்தாராவுக்குத் தெரியக்கூடாது என்பதுதான் பிரபு தேவா பதட்டப்பட்டதற்கான காரணம். வெகேஷன் ட்ரிப்பை பாதியில் முடித்துவிட்டு, தனது குழந்தைகளுடன் சென்னைக்கு பறந்து வந்த பிரபு தேவா, இங்கே குழந்தைகளை நண்பருடன் அனுப்பி விட்டு, விமான நிலையத்தில் இருந்தபடியே ஹைதராபாத்துக்குக் கிளம்பும் அடுத்த விமானத்தில் பரபரப்பாக பறந்தார் என்கிறார்கள். பிறகு ஹைதராபாத்தில் இருந்த நயன்தாராவை அழைத்துக் கொண்டு மும்பைக்குக் கிளம்பினார்.
மும்பைக்குச் சென்றதுமே இவர்களுக்குள் திருமணம் பற்றிய பேச்சு ஆரம்பித்தது. ரம்லத்துடன் விவாகரத்து கிடைத்ததுமே திருமணம் என்பது மே, ஜூன் என தள்ளி தள்ளிப் போக, ‘வெடி’ படம் வெளிவந்ததும் திருமணம் பண்ணலாம் என்று பிரபு தேவா சொன்னாராம். இப்போது வெடியும் வெளியாகிவிட, ஹிந்திப் பட டைரக்ஷனில் பிஸியாக இருப்பதால் அதை புதுக் காரணமாக காட்டி திருமணத் தேதியை பிரபுதேவா தள்ளிப் போட நயன்தாரா டென்ஷன் ஆகிவிட்டார் என்று முணுமுணுக்கிறார்கள். இதற்கிடையில் ஓணம் பண்டிகை வர, அதைக் காரணமாக வைத்துக் கொண்டு, கொச்சியில் இருக்கும் தனது ஃப்ளாட்டுக்கு நயன்தாரா தனியாக கிளம்பிவிட்டார்.
ஓணம் பண்டிகைக்கு ஒரு மலையாள இதழில் நயன்தாரா படத்தை வெளியிடக் கேட்க, உடனே ஒப்புக்கொண்டிருக்கிறார். திருமணம் தள்ளிப் போகும் டென்ஷனில் இருந்த நயன்தாரா ஒரு கட்டத்தில் அப்பத்திரிகைக்கு எடுக்கும் படங்களை படத் தயாரிப்பாளர்களிடம் கொடுக்கலாம், அதன் மூலம் சினிமாவில் மீண்டும் நடிக்கத் தொடங்கலாம் என்றும் யோசித்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் முணுமுணுக்கிறார்கள்.
இதைக் கேள்விப்பட்டதால் படபடத்த பிரபு தேவா நயன்தாராவைத் தேடி கொச்சிக்கு விரைந்திருக்கிறார். அங்கே நயன்தாராவின் ஃப்ளாட்டுக்கு வந்த பிரபுதேவா, அவரை சமாதானப்படுத்த முயன்றாராம். அப்போது பேச்சுவார்த்தை சீரியஸாக, நயன்தாரா ரொம்பவே ஆவேசப்பட்டுப் பேச, பிரபு தேவா குரல் தழுதழுத்துவிட்டதாம். ஆனாலும் கோபம் தணியாத நயன்தாரா பிரபு தேவாவை அங்கிருந்து கிளம்பும்படி கோபத்தில் கூறியதாக கிசுகிசுக்கிறார்கள்.
மாடியிலிருந்து இறங்கிவந்த பிரபு தேவா ஃப்ளாட்டுக்குக் கீழே ஒரு மணி நேரம் காத்திருந்ததாக தெரிகிறது.
அந்த ஒரு மணிநேரமும் நயன்தாராவை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தாராம். பல எஸ்.எம்.எஸ்.களையும் தட்டிவிட்டார். ஆனால் நயன்தாராவின் மொபைல் போன் அணைத்துவைக்கப்பட்டிருந்தது.
ஒரு வழியாக பல நிமிடங்கள் காத்திருப்பிற்குப் பிறகு நயன்தாரா, பிரபு தேவாவை உள்ளே அழைத்தாராம். அப்போது, ‘உங்களுக்காக நடிப்புக்கு முழுக்குப் போட்டாச்சு. தேடி வந்த ஏழெட்டுப் படங்களையும் வேண்டாம்னு சொல்லியாச்சு. நீங்க திருமணத்தைத் தள்ளித் தள்ளிப் போடுறீங்க. நிறைய செலவு இருக்கு. வாங்கின நாலு காஸ்ட்லியான கார்களுக்கு இன்னும் தவணைகள் கட்டல. ஒரே பிரச்னையா இருக்கு. நான் என்னதான் பண்றது’ என்று நயன்தாரா மனம் குமுறிவிட்டாராம். இதைப் பார்த்து பொறுக்காத பிரபு தேவா உடனடியாக கார்களுக்கான தவணைகளை உடனே செட்டில் பண்ணிவிட்டாராம். அப்படியே நயன்தாராவை கூல் பண்ணிய பிரபு தேவா அவரை அப்படியே மும்பைக்கு அழைத்து வந்துவிட்டார் என்கிறார்கள்.
மும்பைக்கு வந்த பிறகே, பிரச்னைகள், மனவருத்தங்கள் பல இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், ‘எங்களது அன்பு இன்னும் அதிகம் பலமாகி இருக்கிறது’ என்று நயன்தாரா சொல்லி மீடியாவின் வேகத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முயன்றதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நயன்தாரா – பிரபுதேவா லேட்டஸ்ட் ஹாட்டாபிக்ஸ்!
» பிரபுதேவா வழியில் இயக்குநராகிறார் நயன்தாரா…!
» பிரபுதேவா இருக்கும் பாலிவுட் போக நயன்தாரா திட்டம்?
» முதல்வர் விழாவில் நயன்தாரா – பிரபுதேவா ஆடுகிறார்கள்!!
» நயன்தாரா விவகாரம்: சிம்பு – பிரபுதேவா மோதல்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum