கூடுதல் விலைக்கு சினிமா டிக்கெட்! தட்டிக்கேட்டவர் அடித்துக் கொலை!!
Page 1 of 1

கோவையில் சினிமா தியேட்டரில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்த வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். கோவை வேலாண்டிபாளையம், இடையர் பாளையத்தில் ஒரு தியேட்டரில் ஏழாம் அறிவு என்ற சினிமா திரையிடப்பட்டுள்ளது. அந்த தியேட்டருக்கு கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்த தனியார் இன்சூரன்சு ஊழியர் ரமேஷ் (26) தனது நண்பர்கள் பவுல்ராஜ், லோகேஷ், சரவணன், கார்த்திக் ஆகியோருடன் சென்றார். அப்போது டிக்கெட் கவுண்டரில் தகராறு ஏற்பட்டது.
சினிமா டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கூறி ரமேசும், அவர்களுடைய நண்பர்களும் தகராறு செய்தனர். இதனால் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ரமேஷ், தான் வாங்கிய டிக்கெட்டுகளை கிழித்து எறிந்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்தார். அப்போது ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு தடிகளாலும், கூரிய ஆயுதங்களாலும் ரமேசையும் அவருடைய நண்பர்களையும் சரமாரியாக தாக்கியது. இதனால் ரமேஷ் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். படுகாயம் அடைந்த ரமேஷை, கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். ரமேசின் நண்பர்கள் பவுல்ராஜ், லோகேஷ், சரவணன் ஆகியோரும் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தியேட்டர் உரிமையாளரின் உறவினர் பரணிக்குமார் (27), மற்றும் கிஷோர் (26), ராஜ் என்ற ரமேஷ் (26), சுரேஷ் (27), டொமினிக் (26) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ரமேசுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இவருக்கு ரமாதேவி என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அரசு நிர்ணயித்த விலைக்கு மட்டுமே எந்திரன் டிக்கெட் விற்பனை – ரஜினி வேண்டுகோள்!
» ஆர்யாவுக்கும், எனக்கும் வெறும் நட்புதான்-அடித்துக் கூறுகிறார் லட்சுமி ராய்
» ராவணன்… எக்கச்சக்க விலைக்கு வாங்கியது ராஜ் டிவி!
» திருப்தி விலைக்கு கிடைக்காது
» கடலையே விலைக்கு வாங்கிய ஜெமினி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum