தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

“விஸ்வரூபம்” படத்திற்காக இணையும் கமல்ஹாசன் மற்றும் வைரமுத்து

Go down

“விஸ்வரூபம்” படத்திற்காக இணையும் கமல்ஹாசன் மற்றும் வைரமுத்து Empty “விஸ்வரூபம்” படத்திற்காக இணையும் கமல்ஹாசன் மற்றும் வைரமுத்து

Post  ishwarya Wed Apr 10, 2013 6:32 pm

உலகநாயகன் கமலஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கும் படம் “விஸ்வரூபம். இது அவரது சினிமா வாழ்வில் மிக முக்கியமான படமாகும். இப்படம் துவங்கி, பூந்தமல்லியிலுள்ள ஒரு தொழிற்சாலையில் இதன் படப்பிடிப்பு பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இப்படத்திற்காக கமலஹாசனும் வைரமுத்துவும் ஒன்றினைந்து பணிபுரிகின்றனர்.

காலை 11 மணிக்கு ஷூட்டிங் தளத்திற்கு சென்ற வைரமுத்து மாலை 6 மணி வரை கதையின் விவாதத்தில் ஈடுப்பட்டிருந்தார். இது வரை படமாக்கப்பட்ட 40 நிமிட படம் அவருக்காக கமலால் போட்டு கான்பிக்கப்பட்டது. அதை பார்த்து வியந்து போனார் கவிபேரரசு. படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளது. அதில் 1 பாடலை மட்டும் கமல் அவர்களே எழுதியுள்ளார். மீதம் உள்ள 5 பாடல்களை எழுதுள்ளார் வைரமுத்து.

சிங்கப்பூரில் அகில உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடக்க உள்ளது. அதனை துவங்கி வைக்க அவர் நேற்று சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து திரும்பி வந்ததும் அனைத்து பாடல்களையும் ஒரே மூச்சாக எழுதி முடிக்க உள்ளார் வைரமுத்து. இப்படத்திற்கு இசையமைக்கிறார் ஷங்கர் மகாதேவன். கமல்ஹாசன் மற்றும் வைரமுத்து போன்ற ஜாம்பவான்கள் இணையும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் கூடிவிட்டது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum