தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆபரேஷனுக்கு பிறகு மனோரமா உடல்நிலை முன்னேற்றம்!

Go down

ஆபரேஷனுக்கு பிறகு மனோரமா உடல்நிலை முன்னேற்றம்! Empty ஆபரேஷனுக்கு பிறகு மனோரமா உடல்நிலை முன்னேற்றம்!

Post  ishwarya Wed Apr 10, 2013 5:46 pm

நடிகை மனோரமா மூளையில் உறைந்து இருந்த ரத்தம் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டதையடுத்து, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். நடிகை மனோரமா கடந்த மாதம் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றபோது, அங்குள்ள விருந்தினர் விடுதி குளியல் அறையில் வழுக்கி விழுந்தார்.

அப்போது, அவருடைய தலையில் அடிபட்டது. அதற்கு முறையாக சிகிச்சை பெறாததால், அவருடைய மூளையில் ரத்தம் உறைந்தது. இந்நிலையில் தலையில் மீண்டும் வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு தலையில் உறைந்த ரத்தம் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கிடையில் மனோரமாவுக்கு ஏற்கனவே ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் இருந்ததால் அவருடைய உடல்நிலை மோசமானது.

கோமா நிலைக்கு சென்ற மனோரமா தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து அவரது தலையில் உறைந்திருந்த ரத்தத்தை `ஆபரேஷன் மூலம் அகற்ற டாக்டர்கள் முடிவு செய்தார்கள். அதன்படி, நேற்று ஆபரேஷன் நடந்தது. ஆபரேஷனுக்கு பிறகு மனோரமா உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். கிருமி தொற்று ஏற்படுவதை தவிர்ப்பதற்காக, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum