மனிஷா உடல்நிலை : சகோதரர் உருக்கம்
Page 1 of 1
மனிஷா உடல்நிலை : சகோதரர் உருக்கம்
சென்னை: கேன்சருக்கு அமெரிக்காவில் சிகிச்சை எடுக்கும் மனிஷா கொய்ராலா பற்றி சொல்ல இது சரியான நேரம் அல்ல என்றார் அவருடைய சகோதரர்.
முதல்வன், மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா. இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை பற்றி அவரின் தம்பி சித்தார்த்தா கூறியது: எனது பெற்றோர், என் மனைவி மற்றும் மகள் யாமினி என குடும்பத்தினர் அனைவரும் மனிஷாவுடனே அமெரிக்காவில் தங்கி இருக்கிறோம். இது அவருக்கு பெரிய ஆறுதலாக உள்ளது. கேன்சருக்காக அவர் சிகிச்சை எடுத்து வருகிறார்.
குணம் அடைந்து திரும்பிய பிறகு இருவரும் சேர்ந்து படம் தயாரிக்க உள்ளோம். மேலும் நேபாளத்தில் கலாச்சார அகடமி நடத்தி வருகிறோம். விரைவில் அங்கு பட தயாரிப்பு யூனிட்டும் தொடங்க உள்ளோம். மனிஷா உடல்நிலை பற்றி கேட்கிறார்கள். அவர் தற்போது தொடர் சிகிச்சையில் இருக்கிறார். அதுபற்றி நான் குறிப்பிட்டு எதுவும் சொல்ல விரும்பவில்லை. அவர் குணம் அடைந்து வருகிறார் என்று மட்டும் சொல்ல முடியும். அவரது உடல்நிலை பற்றி சொல்வதற்கு இது சரியான நேரம் அல்ல. அவர் சிகிச்சை பெற்றுவரும் இத்தருணத்தில் அவருடன் தங்கி இருக்கும் அனுபவம் பற்றியும் இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் அந்த கடினமான தருணங்களை இப்போதுதான் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மனிஷா மனதை கொய்வாரா?
» போதையில் தள்ளாடிய மனிஷா!
» மனிஷா கொய்ராலாவுக்கு அறுவை சிகிச்சை தள்ளிப்போடப்பட்டது
» மனிஷா கொய்ராலா மருத்துவமனையில் அனுமதி
» தனியாக வாழ பிடிக்கிறது -மனிஷா கொய்ராலா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum