தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அனுஷ்காவை ஓரங்கட்டிய அமலா பால்!

Go down

அனுஷ்காவை ஓரங்கட்டிய அமலா பால்! Empty அனுஷ்காவை ஓரங்கட்டிய அமலா பால்!

Post  ishwarya Wed Apr 10, 2013 5:28 pm

மைனா என்ற ஒரேபடம் அமலா பாலை மேலும் உயரத்தில் தூக்கி வைத்து விட்டது. இதே மைனா தெலுங்கிலும் ‘பிரேமா கைதி’ என்ற பெயரில் வெளியாகி வசூலில் பின்ன… ஆந்திராவிலும் ஹாட் ஹீரோயின் ஆகிவிட்டார் அமலா பால். ஆனால் மைனா படத்தின் ஹீரோவை டோலிவுட்டில் மருந்துக்குக் கூட நடிக்க வாங்க என்று ஒருவரும் அழைக்க வில்லையாம். இதை வருத்தத்தோடு அவரே சொல்லீயிருகிறார். தற்போது அதர்வா ஜோடியாக அமலா நடித்து வரும் முப்பொழுதும் உன் கற்பனைகள் படம், தெலுங்கிலும் ‘நிரந்தரம் நீ வூகாலே’ என்று ஒரேநேரத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தோடு இரண்டு புதிய தெலுங்கு படங்களை ஒப்புக்கொண்டிருக்கும் அமலா பால், தமிழிலும் தனது இடத்தை இழக்க தயாராக இல்லை. இதனால் கார்த்தி ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்த அனுஷ்காவுக்கு கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து,

அந்த இடத்தை அமலா பால் கைபற்றி விட்டதாகச் சொல்கிறார்கள் கார்த்தியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான க்ரீன் ஸ்டூடியோ வட்டாரத்தில். முதலிரண்டு படங்கள் தவிர்த்து ,கார்த்தி தொடர்ந்து கமர்ஷியல் படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். சிறுத்தைக்கு அடுத்து சுரா‌ஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பதாக முடிவான நேரத்தில், இடையில் சகுனி எதிர்பாராத படமாக வந்து சேர்ந்து விட்டது கார்த்திக்கு. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து,

சகுனிகாக டப்பிங் பேசி வரும் கார்த்தி அடுத்து சுராஜ் படத்துக்கு தயாராகிவிட்டார் இன்னும் பெய‌ரிடப்படாத இந்தப் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகிறது. இதில்தான் கார்த்தி ஜோடியாக அனுஷ்கா முதலில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

ஆனால் அனுஷ்காவுக்கு கால்ஷீட் பிரச்சனை இருப்பதால் 100 நாட்கள் ஒரே ஷேட்யூலில் படத்தை முடிக்க திட்டமிட்டிருக்கும் இயக்குனர் சுராஜ், தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு கால்ஷீட் தரமுடியுமா என்று கேட்டாராம் அமலா பாலிடம்! கார்த்தி என்றால் கசக்குமா என்ன? உடனே மைனா தலையாட்டி விட விரைவில் சென்னையில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum