வேலாயுதத்துல விஜய்யுடன் கலந்து கட்டி பின்னியெடுத்தீட்டீங்களே? – ஹன்சிகாவுடன் ஒரு சந்திப்பு
Page 1 of 1

பட்டரில் கொஞ்சம் வெனிலா க்ரீமையும் கலந்து செய்த கொழுகொழு சிலையைப் போல தள தளவென இருக்கிறார் ஹன்சிகா. இளசுகளின் தூக்கத்தைக் கெடுக்கும் ஹன்சியுடன் ஒரு இனிய சந்திப்பு…..
‘வேலாயுதம்’ படத்துல விஜய்யுடன் கலந்து கட்டி பின்னியெடுத்தீட்டீங்களே?
ஹா..ஹா..ஹா.. (அழகாய் சிரிக்கிறார்) கதைப்படி நான் மாமா விஜய்யை ரொம்ப ரொம்ப லவ் பண்ற பொண்ணு. அவருக்காக எதையும் செய்யத் தயங்காத காதல் இருக்குற கதாபாத்திரம். அதனால கதைக்குத் தேவைப்பட்டதால கொஞ்சம் கிளாமராக நடிச்சேன். அது தப்பு இல்லையே.. ஒரு நடிகைன்னா எல்லா மாதிரியான கதாபாத்திரங்களையும் பண்ண முடியணும்.
கவர்ச்சியாக நடிச்சா சீக்கிரமே ஈர்ப்புக் குறைஞ்சிடுமே, அப்புறம் எப்படி ரொம்ப நாள் தாக்குப்பிடிக்க முடியும்?
பார்க்கிறவங்களுக்கு திகட்டுற மாதிரி கவர்ச்சியாக நடிச்சாதான் சீக்கிரமே போரடிச்சிடும். கதைக்கேத்த கவர்ச்சியாக நடிச்சா மக்கள் மனசுல சுலபமாக நுழைஞ்சிடலாம். தொடர்ந்து பண்ற படங்கள்ல கொஞ்சம் கொஞ்சமாக பெர்ஃபார்மன்ஸூக்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சா நமக்குன்னு ஒரு நல்ல இடம் மக்கள் மனசுல கிடைக்கும். குஷ்பூ, சிம்ரன், ஜோதிகா இவங்களெல்லாம் இன்னிக்கும் பேசப்படுறதுக்குக் காரணம் அதுதான். என் ரூட்டும் அதுதான்.
ஒழுங்காக தமிழ் பேசக் கத்துக்கிறீங்களா?
என்னங்க… என்னோட தமிழ் இப்போ எப்படி இருக்கு பார்த்தீங்களா? நீங்க முன்னாடி சந்திச்சப்ப இங்கிலீஷ்ல பேசினேன். இப்போ தமிழ்ல நல்லா பேசுறேனா? ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுல எல்லோரும் என்னோடு தமிழ்லதான் பேசணும்னு டைரக்டர் ராஜேஷ் சொன்னார். நானும் கொஞ்சம் கொஞ்சமா தமிழ் கத்துக்கிட்டே வர்றேன். அடுத்த தடவை சந்திக்கும் போது நல்ல தமிழ்ல பேசுறேன். அதுக்கு நான் கியாரண்டி.
பத்தொன்பது வயசுலேயே ஹீரோயினாகிட்டீங்களே. அது ப்ளஸ்ஸா மைனஸா?
ப்ளஸ்தான். இதுல என்ன சந்தேகம். வயசு இருக்கும் போதுதான் கிளாமராக நடிக்க முடியும். நாள் போகப் போக பெர்ஃபார்மன்ஸ் உள்ள கதாபாத்திரங்கள்ல நடிக்கிற தைரியமும் வாய்ப்புகளும் அமையும். இப்போ என்னோட ரசிகர்கள் என் வயசிலேயும் இருக்காங்க. அவங்களும் என்னோட சேர்ந்து ட்ராவல் பண்ணும் போது ஒரு நல்ல கெமிஸ்ட்ரி இருக்கும்.
அதுசரி, உங்க ஸ்கின் இப்படி வழுவழுன்னு இருக்கே, அதுக்கு அப்படி என்னதான் பண்றீங்க?
என்னோட அம்மா பல் மருத்துவர். அவங்க எனக்குச் சொன்ன ஒரே விஷயம் இயற்கைதான் எப்போதுமே அழகு. ஷூட்டிங் இல்லைன்னா நான் அதிகம் மேக்கப் பண்ணிக்கிறது இல்ல. நல்லா சாப்பிடுவேன். ஆனால், அதுக்கேத்த மாதிரி ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை ஃபாலோ பண்றேன். ராத்திரி சீக்கிரமே தூங்கிடுவேன். இளநீர் அதிகம் குடிப்பேன், அவ்வளவுதான்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய்யுடன் நாம் தமிழர் தலைவர் சீமான் சந்திப்பு
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம
» ஹன்சிகாவுடன் சிம்பு காதலா?
» மீண்டும் விஜய்யுடன் அசின்!
» விஜய்யுடன் இணையும் மோகன்லால்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum