தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இது சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் – மகிழ்ச்சி கூத்தாடும் இயக்குனர்கள்

Go down

இது சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் – மகிழ்ச்சி கூத்தாடும் இயக்குனர்கள் Empty இது சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல் – மகிழ்ச்சி கூத்தாடும் இயக்குனர்கள்

Post  ishwarya Wed Apr 10, 2013 4:41 pm

ஒன்றல்ல, இரண்டல்ல, அரை டஜன் சூப்பர் ஸ்டார்களை உள்ளடக்கிய ஏரியா டோலிவுட். அப்படி ஒரு ஸ்டார்களில் ஒருவர்தான் நாகார்ஜுனா. உதவி இயக்குனர்களிடம் அவர் காட்டும் பரிவுக்கும் அன்புக்கும் தலை வணங்கி தாளம் போடுகிறது அதே டோலிவுட். அது எப்படி? அதை சொல்லும் முன் ஒரு விஷயத்தை கவனிக்க…. இது தமிழ்நாட்டில் இருந்து அவரிடம் கதை சொல்லப் போனவர்களின் அனுபவம்.

முதலில் கதை சொல்ல செல்பவர் தன்னை பற்றிய பயோ டேட்டாவை அவரது அலுவலகத்தில் கொடுத்துவிட வேண்டும். அது திருப்தியாக இருக்கும் பட்சத்தில், ஒரு வாரத்திற்கு முன்பாக அவரது மேனேஜர் தொடர்பு கொள்வார் இயக்குனரை. சார் உங்களிடம் கதை கேட்க முடிவு செய்திருக்கார். நீங்கள் இந்த தேதியில் புறப்பட்டு வர விமான டிக்கெட் அனுப்பி வைக்கிறோம். விமான நிலையத்தில் உங்களுக்காக கார் காத்திருக்கும் என்று சொல்லி விடுவார்களாம்.

சொன்ன மாதிரியே விமான டிக்கெட் கூரியரில் வீடு தேடி வந்துவிடும். ஐதராபாத் விமான நிலையத்தில் காருடன் காத்திருக்கும் நபர் உங்களை அழைத்துச் செல்வார். எங்கு தெரியுமா? நாகார்ஜுனாவின் ஏரியாவிலிருக்கும் பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு. அங்கு இயக்குனருக்கு ரூம் போடப்பட்டிருக்கும். என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஒரு நாள் முழுக்க ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் மறுபடியும் கார் வரும்.

பத்தே நிமிடம்தான் கதை கேட்பார் நாகார்ஜுனா. அது பிடித்திருந்தால், இன்னும் சிறிது நேரம் அந்த கதை கேட்கும் படலம் நீடிக்கும். பிறகு அந்த இயக்குனர் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்றால், அந்த இடத்திலேயே ‘ஸாரி பிரதர். வேற யாரையாவது ட்ரை பண்ணுங்க’ என்று கூறிவிடுவார். அறையிலிருந்து வெளியே வரும் உதவி இயக்குனருக்கு ஒரு கவர் தரப்படும். அதில் ஐம்பதாயிரம் ரூபாய் இருக்கும். மீண்டும் காரில் அவரை ஓட்டலுக்கு அழைத்துச் செல்வார்கள் நாகார்ஜுனாவின் உதவியாளர்கள். இயக்குனர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டபின் விமானத்தில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைப்பார்கள்.

ஒருவேளை கதை பிடித்திருந்து அந்த படத்தில் நடிப்பதாக முடிவு செய்துவிட்டால், வெளியே வரும் இயக்குனர் கையில் இரண்டு லட்சம் கொடுக்கப்படும். பின்பு அதே ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்படுவார் அவர். அவருக்கான சம்பளத்தை நிர்ணயித்து மீதி தொகையை செக்காக கொடுப்பார்கள். அதுமட்டுமல்ல, ஒரு மாதம் வெளிநாட்டு ட்ரிப்புக்கும் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள் அவரது உதவியாளர்கள். அவ்வளவு செலவும் நாகார்ஜுனாவுடையது. இந்த ட்ரிப் கதையை இன்னும் டெவலப் செய்யதான்.

ஆறு மாதத்திலோ, ஒரு வருடத்திலோ ஒரு தேதி நிர்ணயிக்கப்பட்டு அன்றிலிருந்து படப்பிடிப்பு நடைபெறும் இடத்தை கூட குறிப்பிட்டு சொல்லி விடுவார்களாம். இடையில் நாகார்ஜுனாவை இயக்குனர் பார்க்கவே தேவையில்லை. எல்லாம் அவரது மேனேஜர் கண் பார்வையில் கனக்கச்சிதமாக இருக்குமாம். இயக்குனரும் நாகார்ஜுனாவின் ஊழியர்களும் தொடர்பில் இருந்து படப்பிடிப்புக்கான பணிகளை கவனிக்க வேண்டும்.

படப்பிடிப்பு துவங்குகிற தேதியில் மிக சரியாக ஸ்பாட்டில் இருப்பாராம் நாகார்ஜுனா. அதுமட்டுமல்ல, கடைசியில் அந்த படம் ஓடாவிட்டாலும் கூட ஒரு பெரிய தொகை வழங்கப்படுமாம் இயக்குனருக்கு. அது அடுத்த படம் வரைக்கும் தன்னை அவர் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு.

இப்படி ஒரு சிஸ்டமேட்டிக்கான நடிகரை இந்தியாவிலேயே பார்த்ததில்லை என்று மெய் மறந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள் அவரை தேடிப்போய் கதை சொல்லி வாய்ப்பை இழந்தவர்களும், பெற்றவர்களும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் ஜூலையில் வெளியாகும் – தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் ஜூலையில் வெளியாகும் - தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.
» 'பவர் ஸ்டாரின் 'ஸ்ரீனா'?!
» இசை படத்தில் நான்கு இயக்குனர்கள்
» நாயகன் பாத்திரத்திற்கு பவர் ஸ்டாரின் சம்பளம் ரூ.2 கோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum