'பவர் ஸ்டாரின் 'ஸ்ரீனா'?!
Page 1 of 1
'பவர் ஸ்டாரின் 'ஸ்ரீனா'?!
காமெடியாகவே இருந்தாலும் அதை சீரியஸ் பார்வையுடன் பார்த்து கலை தாகத்தை தணித்துக் கொண்டிருக்கும் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசனின் பேஸ்புக் பக்கம் போய்ப் பார்த்தால் ஸ்ரீனா என்ற ஒரு போஸ்டர் காணப்பட்டது. அதைப் பார்த்தபோது ஆச்சரியம் வரவில்லை, மாறாக திகிலடித்தது. காரணம், சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ராணா' படத்தை காப்பியடித்து மார்பிங் செய்யப்பட்ட படம் அது. 'லத்திகா' என்ற 'இமாலயப்' படத்தை எடுத்து, நடித்து, வெளியிட்டு தமிழ்த் திரையுலக ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்க வைத்தவரான பவர் ஸ்டார், 'ஆனந்தத் தொல்லை', 'தேசிய நெடுஞ்சாலை', 'இந்திரசேனா', 'கருங்காலி', 'மன்னவன்', 'மூலக்கடை முருகன்', 'நானே வருவேன்', 'பூங்கொடி ஜன்னலில்', 'சுரங்கப் பாதை', 'திருமா என்கிற திருமாணிக்கம்', 'உனக்காக ஒரு கவிதை' என்று ஏகப்பட்ட படங்களில் நடிப்புத் திறமையை காட்டிக் கொண்டிருக்கிறார். அவரது படப் பட்டியலை முழுசா சொன்னால், லிஸ்ஸ்ஸ்ட் பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸா போகும். சீனிவாசன் பெயரில் ஒரு பேஸ்புக் உள்ளது. அதில் ஏகப்பட்ட படம். அதில் ஒன்றாக இந்த 'ஸ்ரீனா' இடம் பெற்றுள்ளது. அதில் இன்னொரு படம் 'பவர் பாட்டர்' அதாவது ஹாரி பாட்டரை காப்பியடித்து ஒரு ஸ்டில். அதில் விளக்குமாற்றில் உட்கார்ந்து கொண்டு சீனிவாசன் பறப்பது போல உள்ளது. ஒருவேளை நிஜமாகவே இதுபோன்ற படங்களில் அவர் நடிக்கப் போகிறாரா என்பதும் தெரியவில்லை. ஏனென்றால், இவர் செய்யக் கூடிய ஆள். அந்தளவுக்கு கெப்பாசிட்டி உள்ள ஆள்தான். எனவே சற்று திகிலாகத்தான் இருக்கிறது! இந்த மூட்டப்பூச்சி இம்ச தாங்க முடியலடா சாமி............
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராணாவுக்குப் போட்டியாக ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனின் ‘ஸ்ரீனா’?
» நாயகன் பாத்திரத்திற்கு பவர் ஸ்டாரின் சம்பளம் ரூ.2 கோடி
» ஷங்கரின் ‘ஐ’.. பவர் ஸ்டாரின் ‘ஐ’.. எப்படி சொன்னா ஷங்கருக்கு பிடிக்கும்?
» புதுவை பாரதி பூங்காவில் பவர் ஸ்டாரின் 'நான் சரக்கு நீ ஊறுகா' படப்பிடிப்பு
» பவர் கூடும் பவர் ஸ்டார்
» நாயகன் பாத்திரத்திற்கு பவர் ஸ்டாரின் சம்பளம் ரூ.2 கோடி
» ஷங்கரின் ‘ஐ’.. பவர் ஸ்டாரின் ‘ஐ’.. எப்படி சொன்னா ஷங்கருக்கு பிடிக்கும்?
» புதுவை பாரதி பூங்காவில் பவர் ஸ்டாரின் 'நான் சரக்கு நீ ஊறுகா' படப்பிடிப்பு
» பவர் கூடும் பவர் ஸ்டார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum