தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சோனியாவுடன் ஜித்தன் ரமேஷ் குத்தாட்டம்!

Go down

சோனியாவுடன் ஜித்தன் ரமேஷ் குத்தாட்டம்! Empty சோனியாவுடன் ஜித்தன் ரமேஷ் குத்தாட்டம்!

Post  ishwarya Wed Apr 10, 2013 1:46 pm

சோனியா அகர்வால் நடித்து வரும் “ஒரு நடிகையின் வாக்குமூலம்” படத்தில், சோனியாவுடன் சேர்ந்து ஜித்தன் ரமேஷ் ஒரு குத்தாட்டாம் போட்டுள்ளார். ஒரு நடிகை தனக்குள்ள ஆசை, விருப்பம், குடும்பம், சொந்தங்கள், அந்த நட்சத்திரங்களின் வாழ்க்கையில் நடக்கும் சோகங்கள் என்று ஒட்டு மொத்த நடிகையின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை பதிவு செய்யும் வகையில் டைரக்டர் ராஜ் கிருஷ்ணா “ஒரு நடிகையின் வாக்குமூலம்” என்ற படத்தை இயக்கி வருகிறார். “புன்னகை பூ” கீதா இப்படத்தை தயாரிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

பொதுவாக ஒரு படத்தில் குத்தாட்டம் என்றால் நடிகையை தான் ஆட வைப்பார்கள். ஆனால் நடிகையின் வாக்குமூலத்தில் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு நடிகரை ஆட வைத்திருக்கின்றனர். அவர் வேறுயாரும் அல்ல, நம்ம ஜித்தன் ரமேஷ் தான். மறைந்த பின்னணி பாடகி சொர்ணலதாவின் அண்ணன் மகள் ரீமா சொர்ணலதா இந்த பாடலை பாடியிருக்கிறர்.

சோனியாவுடன் குத்தாட்டம் போட்டது பற்றி ரமேஷிடம் கேட்டபோது, பொதுவாக இதுபோன்ற பாடலுக்கு க்ளாமர் நடிகை ஒருவரை ஆட வைப்பது வழக்கம். ஆனால், வித்தியாசமா நான் ஆடியிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இப்போ நிறைய ஈகோ குறைஞ்சு இருக்கு. “கோ” படத்தில் கூட ஒரு பாடலில் நிறைய நட்சத்திரங்கள் தோன்றி டான்ஸ் ஆடினார்கள்.

இப்படி இருப்பது ரொம்ப நல்ல விஷயம் தானே என்கிறார் சோனியாவுடன் ஆடிய களைப்பில் ரமேஷ். அதுமட்டுமல்ல, சோனியாவுடன் முதலில் ஆட பயந்த ரமேஷ், உடனே டான்ஸ் எல்லாம் கத்துக்கிட்டு ஆடி அசத்தியிருக்கிறாராம். இப்போது, சிம்புவின் அண்ணனாக நடித்திருக்கும் ஒஸ்தி படத்திற்காக காத்திருக்கிறாராம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum